ETV Bharat / state

கரோனா தொற்றால் மூதாட்டி உயிரிழப்பா? ரத்த மாதிரி சேகரிப்பு - Woman Dying With Corona Sign

நீலகிரி: முள்ளிகூர் கிராமத்தில் இறந்த மூதாட்டி ஒருவருக்கு கரோனா அறிகுறி இருந்ததால் பரிசோதனைக்காக ரத்த மாதிரி சேகரிக்கப்பட்ட பின், அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டது.

கரோனா வைரஸ்
கரோனா வைரஸ்
author img

By

Published : Jul 8, 2020, 1:10 PM IST

நீலகிரி மாவட்டம் முள்ளிகூர் கிராமத்தில் 75 வயது மதிக்கத்தக்க மூதாட்டி ஒருவருக்கு கடந்த சில நாட்களாக காய்ச்சல், மூச்சு திணறலுடன் மருத்துவ சிகிச்சை எடுக்காமல் வீட்டில் இருந்தார். இந்நிலையில், நேற்று (ஜூலை 7) இரவு திடீரென அவர் உயிரிழந்தார்.

அவருக்கு கரோனா அறிகுறிகள் இருந்ததால் வைரஸ் தொற்றால்தான் இறந்திருக்கக் கூடும் என்ற அச்சம் பொதுமக்களிடையே எழுந்தது. இதனால் அவரது உடலை அடக்கம் செய்ய அக்கிராம மக்களிடையே குழப்பம் ஏற்பட்டுள்ளது. பின்னர் இது குறித்து சுகாதாரத் துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த சுகாதரத் துறையினர், கிராமத்தை சுற்றி கிருமிநாசினி தெளித்ததோடு, இறந்த மூதாட்டியின் உடலில் இருந்து பரிசோதனைக்காக ரத்த மாதிரியை எடுத்தனர்.

இறந்த பெண்ணின் உடலை அடக்கம் செய்ய கொண்டு செல்லும் காட்சி

அதைத் தொடர்ந்து, அந்த கிராமத்திலுள்ள இளைஞர்கள் அவரது உடலை அடக்க செய்ய முன் வந்ததால், அவர்களுக்கு வருவாய் துறை சார்பில் முழு உடல் கவசம் கொடுக்கப்பட்டது. அவர்கள் அதனை அணிந்து கொண்டு மூதாட்டியின் உடலை அடக்கம் செய்தனர்.

இதையும் படிங்க: நீதிபதிக்கு கரோனா: மூன்று நீதிமன்றங்கள் மூடல்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.