நீலகிரி: உதகை அருகே HPF, இந்து நகர் உள்ளிட்டப்பகுதிகள் அடர்ந்த வனப்பகுதியை ஒட்டியுள்ள குடியிருப்புப் பகுதிகளாகும். கடந்த சில நாட்களாக இந்தப்பகுதியில் புலி நடமாட்டம் தென்பட்டுள்ளது.
இதனால் அப்பகுதி மக்கள் மிகுந்த அச்சமடைந்து வந்த நிலையில், வனத்துறையினருக்கு ஏற்கெனவே தகவல் தெரிவித்திருந்தனர். இதுகுறித்து தனிக்குழு அமைத்து வனத்துறையினரும் ரோந்துப்பணியில் ஈடுபட்டு புலி நடமாட்டத்தைக் கண்காணித்து வந்தனர்.
இந்நிலையில் இந்து நகர் பகுதியில் புலி ஒன்று பசுமாட்டை அடித்துக்கொன்று இரையாக்கிக்கொண்டு, அதன் அருகே உலா வந்துள்ளது. இதனை அந்தப்பகுதி மக்கள் வீடியோவாகப்பதிவு செய்துள்ளனர். புலி நடமாட்டத்தால் அந்தப் பகுதியில் உள்ள பொதுமக்கள் மிகுந்த அச்சமடைந்துள்ளனர். சம்பவ இடத்திற்கு வனத்துறையினர் விரைந்துள்ளனர்.
புலி நடமாட்டம் காரணமாக பொதுமக்கள் வனப்பகுதியில் விறகு சேகரிக்க செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
இதையும் படிங்க: ராணுவ வீரர்களை போல ஆகாயத்தில் தொங்கி பள்ளி மாணவர்கள் சாகசம்..!