நீலகிரி: முதுமலை புலிகள் காப்பகத்திற்கு ஏராளமான காட்டு யானைகள் வந்துள்ளன. இதில் ஒற்றை யானை அடிக்கடி சாலை ஓரத்திற்கு வருவதை வாடிக்கையாகக் கொண்டுள்ள நிலையில் மசினகுடியிலிருந்து தெப்பக்காடு செல்லும் நெடுஞ்சாலையின் ஓரத்திற்கு வந்த ஒற்றை ஆண் காட்டு யானை ஆதிவாசி மக்கள் வழிப்பட்டு வரும் தண்டு மாரியம்மன் கோவிலின் அருகே சென்றது.
பின்னர் அந்த வழியாகச் செல்லும் வாகன ஓட்டிகள் மற்றும் பொது மக்கள் கோவிலில் உள்ள கற்சிலைகள் மீது வைத்திருந்த பூக்களைத் தனது தும்பிக்கையால் எடுத்து தலையின் மீது போட்டுக்கொண்டது.
அந்த காட்சிகளை பதிவு செய்த வாகன ஓட்டிகள் சமூக வலை தலங்களில் பதிவிட்டுள்ளனர். மனிதர்களைப் போல பக்தி பரவசத்துடன் சாமி சிலைகள் மீது இருந்த பூவை காட்டுயானை தும்பிக்கையால் எடுத்து தன் மீது போட்டுக்கொண்ட காட்சி வைரலாகி வருகிறது.
இதையும் படிங்க:செந்தில் பாலாஜி மீது தொடரப்பட்ட மோசடி வழக்கை ரத்து செய்யக் கூடாது: அமலாக்கத்துறை