நீலகிரி மாவட்டம் குன்னூர் அடர்ந்த வனங்கள் சூழ்ந்த பகுதியில் யானை, கரடி, காட்டெருமை, மான் உள்ளிட்ட பல வகையான வன விலங்குகள் வாழ்ந்து வருகின்றன. இவைகள் உணவு தண்ணீருக்காக குடியிருப்பு பகுதிக்குள் அவ்வப்போது புகுந்துவிடும்.
இந்நிலையில் அரியவகையான ஒரு வயது மதிக்கத்தக்க ஆண் சருகுமான் ஒன்று குன்னூர் அருகே உள்ள அட்டடி குடியிருப்பு பகுதியில் நாய்களால் விரட்டப்பட்டு குடியிருப்புக்குள் புகுந்தது.
இதனைக் கண்ட அப்பகுதி பொதுமக்கள் நாய்களை விரட்டி சருகுமானை காப்பாற்றி, வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர். இத்தகவல் அறிந்து விரைந்து வந்த குன்னூர் வனத்துறையினர் சருகுமான் கைப்பற்றி அடர்ந்த வனப்பகுதியில் கொண்டு சென்று விட்டனர்.
இதையும் படிங்க: வாட்ஸ்அப் கால் மூலம் ஜல்லிக்கட்டு காளைக்கு அரசு மருத்துவர் வைத்தியம்!