காலாட்படையினர் காஷ்மீர் ஸ்ரீநகர் விமானப்படை தளத்தில் எதிரிகளுடன் போரிட்டு, பள்ளத்தாக்கு பகுதியை 1947ஆம் ஆண்டு மீட்டனர். காலாட்படையினரின் வீர செயலை போற்றும் வகையில் ஆண்டுதோறும், அக் 27ஆம் தேதி ராணுவத்தின் சார்பில், காலாட்படை தினம் கொண்டாடப்படுகிறது.
நீலகிரி மாவட்டம், குன்னுார் வெலிங்டன் மெட்ராஸ் ராணுவ மையத்தில் உள்ள போர் நினைவிடத்தில் 72வது ஆண்டு காலாட்படை தினம் கொண்டாடப்பட்டது. பாண்டு வாத்தியம் முழங்க தேசிய பாடல்கள் இசைக்க ராணுவ வீரர்கள் அணிவகுத்து நின்றனர்.
ராணுவ பயிற்சி கல்லூரி தலைவர் லெப்டினன்ட் ஜெனரல் வி.கே.மோகன், முன்னாள் ராணுவ அலுவலர்கள், ராணுவ வீரர்கள் ஆகியோர் போர் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து போரில் உயிர்நீத்த ரானுவ வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தினர்.
இதையும் படிங்க: மோடிக்கு எதிராக கோஷம் எழுப்பிய மாவோயிஸ்ட் இளைஞர்