நீலகிரி மாவட்டம் மஞ்சூர் முதல் கோவை செல்லும் ஐம்பது கி.மீ சாலை, கெத்தை வனப்பகுதியைக் கடந்து செல்லும் வகையில் உள்ளது. அடர்ந்த வனமான இங்கு யானை, புலி, சிறுத்தை, கரடி உள்ளிட்ட வனவிலங்குகள் நிறைந்த பகுதியாக உள்ளது. இந்த நிலையில் மஞ்சூர் கோவை சாலையில் கெத்தை அருகே இரு தினங்களாக குட்டியுடன் 5 காட்டுயானைகள் முகாமிட்டுள்ளன.
இவை அவ்வழியாக வரும் வாகனங்களை வழிமறித்து வாகனங்களை விரட்டி வருகிறன. இதனால் வாகன ஓட்டிகள் அச்சம் அடைந்துள்ளனர். இந்நிலையில் அந்த வழியாக வந்த வாகனம் ஒன்றை ஐந்து யானைகள் விரட்டியுள்ளன. அப்போது வாகன ஓட்டி சாமார்தியமாக வாகனத்தை நீண்ட தூரம் பின் நோக்கி ஓட்டியதால் வாகனத்தில் இருந்தவர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
இந்தச் சம்பவத்தை வாகனத்தில் இருந்தவர் தனது செல்போனில் பதிவு செய்துள்ளார். பின்னர் சிறிது நேரம் நின்ற காட்டுயானைகள் வனப்பகுதிக்குள் சென்றுள்ளது. காட்டுயானைகள் குட்டியுடன் உலவி வருவதால் வாகன ஓட்டிகள் கவனமுடன் வாகனங்களை இயக்க வேண்டும் என வனத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.
இதையும் படிங்க: சசிகலா பிப். 8இல் தமிழ்நாடு வருகை: இன்று அதிமுக தலைமை அலுவலகத்தில் ஆலோசனை