ETV Bharat / state

உதகையில் 40 லிட்டர் மதுபாட்டில்கள் பறிமுதல் - 40 liters of liquor seized in ooty

தனிப்படை காவல் துறையினர் நடத்திய வாகன சோதனையில் 40 லிட்டர் கேரளா மாநில மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

உதகையில் 40 லிட்டர் மதுபாட்டில்கள் பறிமுதல்

author img

By

Published : Jun 22, 2021, 3:37 PM IST

நீலகிரி: கரோனா ஊரடங்கால் மதுக்கடைகள் மூடப்பட்டுள்ளன. இதனால் கர்நாடகம், கேரளா மாநிலத்திலிருந்து மதுபாட்டில்களை வாகனங்களில் கடத்தி வந்து விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதனை கண்காணிக்க மாநில எல்லையில் காவல் துறையினர் நாள்தோறும் தீவர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் இன்று காலை உதகை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மகேஸ்வரன் தலைமையிலான தனிப்படை காவல் துறையினர் உதகை - கூடலூர் தேசிய நெடுஞ்சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது பிரஸ் என்று ஸ்டிக்கர் ஒட்டப்பட்ட சரக்கு வாகனத்தை சோதனை செய்தனர். அதில் 40 லிட்டர் கேரளா மாநில மதுபாட்டில்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. மதுபாட்டில்கள், வாகனத்தை பறிமுதல் செய்தனர். வாகன ஓட்டுநர் விஜய்யை கைது செய்து புதுமந்து காவல் துறையினருடன் ஒப்படைத்தனர்.

இதையும் படிங்க: தி ஃபேமிலி மேன்' 3ஆம் பாகத்தில் விஜய் சேதுபதி?

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.