நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பக உள்மண்டல வனப்பகுதி 321 சதுர கிலோமீட்டர் பரப்பளவை கொண்டது. இந்த வனப்பகுதிகளில் புலிகள் கணக்கெடுப்பு பணிகள் மேற்கொள்வதற்கு தானியங்கி கேமராக்கள் பொருத்தும் பணி இன்று தொடங்கியது. இதற்காக மொத்தம் 191 இடங்கள் தேர்வு செய்யப்பட்டு, 382 தானியங்கி கேமராக்கள் பொருத்தப்பட்டு 25 நாட்களுக்குள் இந்த கணக்கெடுப்பு பணிகள் நடக்கவுள்ளன. இந்த பணியில் வனச்சரகர்கள், வன உழியர்கள் என 100க்கும் மேற்பட்டோர் ஈடுபட்டுள்ளனர்.
இதுகுறித்து வனத்துறையினர் கூறுகையில்," இரண்டு தினங்களில் அனைத்து கேமராக்களும் பொருத்தப்பட்டு கணக்கெடுப்பு பணி தொடங்கப்படும். இந்த நவீன கேமரா மூலம் துல்லியமாக ஒளிப்பதிவு செய்து கணக்கெடுக்க முடியும்" என்றனர்.
இதையும் படிங்க: இடைநிலை, பட்டதாரி ஆசிரியர் பணிக்கான தேர்வு தேதி அறிவிப்பு