ETV Bharat / state

காசி யாத்திரை! உயிரிழந்த இருவர் உடல் நல்லடக்கம்

நீலகிரி: காசிக்கு யாத்திரை சென்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த நான்கு பேர் உயிரிழந்த நிலையில், அதில் குன்னுாரைச் சேர்ந்த இருவரது உடல்கள் சொந்த ஊருக்குக் கொண்டுவரப்பட்டு நல்லடக்கம் செய்யப்பட்டது. அவர்களின் குடும்பங்களுக்கு அரசு உதவ வேண்டுமென பொதுமக்கள் கேட்டுக்கொண்டனர்.

coonoor
author img

By

Published : Jun 13, 2019, 7:34 PM IST

காசிக்கு ஆன்மிகச் சுற்றுலா சென்று ரயிலில் திரும்பிக் கொண்டிருக்கையில் வெப்பச் சலனத்தின் காரணமாக தமிழர்கள் நான்கு பேர் உயிரிழந்தனர். இதில் நீலகிரி மாவட்டத்தில் குன்னுாரைச் சேர்ந்த சுப்பையா, பாலகிருஷ்ணன் ஆகியோரின் உடல்கள் உடற்கூறாய்வு செய்யப்பட்டு விமானம் மூலம் கோவை கொண்டுவரப்பட்டன. பின்பு அங்கிருந்து அமரர் ஊர்தி மூலம் குன்னுாரில் உள்ள ஓட்டுப் பட்டறைப் பகுதிக்குக் கொண்டுவரப்பட்டன.

அங்கு வைக்கப்பட்ட அவர்களின் உடல்களுக்கு பொதுமக்கள் இறுதி அஞ்சலி செலுத்திய பிறகு, மயானத்தில் உடல்கள் நல்லடக்கம் செய்யப்பட்டன. ஆன்மிக சுற்றுப் பயணம் சென்று இறந்தவர்களின் குடும்பங்களுக்கு அரசு நிதி உதவி வழங்க வேண்டுமென பொதுமக்கள் கேட்டுக்கொண்டனர்.

Intro:காசிக்கு யாத்திரை சென்ற குன்னூர் சார்ந்த இருவர் மரணம் அவர்களது உடல் குன்னூர் கொண்டுவரப்பட்டு மயானத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது

Body:நீலகிரி மாவட்டத்தில் இருந்து காசி யாத்திரை சென்ற இருவர் வெப்பச்சலனம் காரணமாக கடந்த 4 நாட்களுக்கு முன்பு மரணமடைந்தனர் சுப்பையா மற்றும் பாலகிருஷ்ணன் ஆகியோர் அவரது உடல் பிரேதபரிசோதனைசெய்யப்பட்டு அவர்களது உடல் விமானம் மூலம் கோவை கொண்டுவரப்பட்டு கோவையிலிருந்து அமரர் ஊர்தி மூலம் குன்னூரில் உள்ள ஓட்டு பட்டறை பகுதிக்கு கொண்டுவரப்பட்டது அப்பகுதி பொது மக்களின் இறுதி அஞ்சலிக்குப் பிறகு குன்னூர் மயானத்தில் அவர்களது உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது இதன் காரணமாக குன்னூர் பகுதி மக்கள் பெரும் சோகத்தில் மூழ்கியுள்ளனர் மேலும் அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் ஆன்மிக சுற்று பயணம் சென்று இருந்த இறந்தவர்களின் குடும்பத்தாருக்கு அரசு நிதி உதவி வழங்கி வழங்க வேண்டுமென கேட்டுக் கொண்டுள்ளனர் பேட்டி கணேஷ் இறந்தவர்களின் உறவினர்குன்னூர்

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.