நீலகிரி: குன்னூர் மார்க்கெட் பகுதியில் சுமார் 50க்கும் மேற்பட்ட மீன் கடைகள் செயல்பட்டு வருகிறது. இங்கு விற்பனைக்குக் கொண்டு வரக்கூடிய மீன்கள் ராமேஸ்வரத்திலிருந்து வரவழைக்கப்படுகின்றன. இந்நிலையில் இன்று இங்கு வந்த மீன்களில் 100 கிலோ எடை கொண்ட மயில் மீன் ஒன்று இருந்தது.
இந்த மீனை நான்கு பேர் சேர்ந்து தூக்கி வைத்தனர். இந்த மீன் கடை முன் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்த நிலையில் அந்த பிரம்மாண்ட மீனை அப்பகுதி மக்கள் ஏராளமானோர் பார்வையிட்டனர். கடலோர மாவட்டங்களில் இது போன்ற பெரிய மீன்களைப் பொதுமக்கள் பார்த்திருப்பார்கள், ஆனால் மலை மாவட்டங்களில் இதுவரை இது போன்ற பெரிய ரக மீன்களை அப்பகுதி மக்கள் பார்ப்பது அரிதாக உள்ளது.
எனவே இந்த மீனை அப்பகுதி சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஆர்வமாக வந்து பார்வையிட்டுச் சென்றனர். மேலும் பலரும் அந்த பிரம்மாண்ட மீனைப் புகைப்படமும், வீடியோவும் எடுத்துச் சென்றனர்.
இதையும் படிங்க: CCTV: பவானிசாகரில் நாயை துரத்திய சிறுத்தை வீடியோ!