தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள பள்ளிகொண்டான் கிராமத்தில் கரோனா வைரஸிருந்து கிராம மக்களை பாதுகாக்க அக்கிராமத்து இளைஞர்கள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்கின்றனர்.
அந்தவகையில் அக்கிராமத்தின் முன்று எல்லைப் பகுதிகளில் தடுப்பு வேலிகள் அமைத்து வெளி நபர்களை உள்ளே அனுமதிக்காமல் பாதுகாத்து வருகின்றனர். அதேபோல் அக்கிராமத்தைச் சேர்ந்தவர்கள் இருச்சக்கர வாகனங்களின் வெளியே சென்று திரும்பும் போது எல்லைப் பகுதிகளில் வண்டியின் சக்கரங்களில் கிருமி நாசினி தெளிக்கின்றனர்.
மேலும் உள்ளே செல்லும்போது வேப்பிலை-மஞ்சள் கலந்த நீரில் கைகளை கழுவிய பிறகு கிராமத்திற்குள் அனுமதிக்கின்றனர். தொடர்ந்து இளைஞர்கள் நான்கு சக்கர வாகனம் மூலம் வீதி, வீதியாகச் சென்று கிருமி நாசினி தெளித்து வருகின்றனர். இளைஞர்களின் இந்த முயற்சியை அக்கிராம மக்கள் அனைவரும் பாராட்டி வருகின்றனர்.
இதையும் படிங்க: நியாயவிலைக் கடை பொருள்கள் கொடுப்பது குறித்து முன்னோட்டம்!