தற்போது பருவ மழை பொய்த்து போனதால் ஏரிகள், குளங்கள் வறண்டு போய் நிலத்தடிநீர் மட்டம் குறைந்து விட்டது. இதனால் குடிநீர் தட்டுப்பாடும், விவசாயம் செய்ய முடியாமலும் போய்விட்டது. இந்நிலையில் இனிவரும் காலங்களிலாவது தண்ணீரை சேமித்து வைத்து விவசாயத்தையும், கால்நடைகளையும் காப்பாற்ற வேண்டும் என்ற நோக்கத்தோடு 'கடைமடை விவசாயிகள் சங்கம்' என்ற பெயரில் இளைஞர்கள் ஒரு அமைப்பை உருவாக்கினர்.
அதன் மூலம் பேராவூரணி நகர் பகுதியில் உள்ள 560-க்கும் மேற்பட்ட ஏக்கர் பரப்புள்ள பெரிய ஏரியை சொந்தப் பணத்தைக் கொண்டு தூர்வாரும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த தகவலை அறிந்த சமூக ஆர்வலர்கள், வெளிநாடு வாழ் மக்கள் இளைஞர்களை ஊக்கப்படுத்தும் வகையில் நிதி உதவி செய்ய முன்வந்துள்ளனர் உள்ளனர். இதன்மூலம் பேராவூரணி மட்டுமல்லாமல் புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி,ஆலங்குடி ஆகிய பகுதிகளில் உள்ள ஏரி, குளங்களை தூர்வாரவும் இந்த அமைப்பினர் திட்டமிட்டுள்ளனர்.