ETV Bharat / state

இளைஞர்களுக்கு மாரடைப்பு மரணங்கள் ஏற்படுகின்றன - அமைச்சர் ம. சுப்ரமணியம் - உடற்பயிற்சி

இளைஞர்களிடையே மாரடைப்பு மரணங்கள் பதிவாகிவருவதாக சுகாதாரத்துறை அமைச்சர் ம. சுப்ரமணியம் தெரிவித்தார்.

35 முதல் 40 வயது வரை உள்ள இளைஞர்கள் மாரடைப்பால் உயிரிழந்து வருகின்றனர்

author img

By

Published : Jan 18, 2023, 8:10 AM IST

அமைச்சர் ம. சுப்ரமணியம்

தஞ்சாவூர்: தமிழ்நாட்டில் மாரடைப்பு மரணங்கள் அதிகரித்துள்ளது. குறிப்பாக 35 முதல் 40 வயது வரை உள்ள இளைஞர்களிடையே மாரடைப்பு மரணங்கள் பதிவாகி வருகின்றன என்று சுகாதாரத்துறை அமைச்சர் ம. சுப்ரமணியம் தெரிவித்தார். தஞ்சாவூரில் உள்ள தனியார் மருத்துவமனையின் 10ஆம் ஆண்டு நிறைவு விழாவில் அமைச்சர் ம.சுப்ரமணியன் கலந்து கொண்டார்.

அப்போது மருத்துவமனையில் உதடு மற்றும் அன்ன பிளவு நோய் அவசர சிகிச்சை பிரிவை திறந்து வைத்தார். அதன்பின் செய்தியாளர்களை சந்தித்த அவர், தமிழ்நாட்டில் 708 அரசு மருத்துவமனைகள் அறிவிக்கப்பட்டு, 500-க்கும் மேற்பட்ட நகர்புற நலவாழ்வு மையங்கள் கட்டப்பட்டு பணிகள் முடிவடையும் நிலையில் உள்ளது.

இவற்றை பிப்ரவரி முதல் வாரத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் திறந்து வைக்கிறார். தமிழ்நாட்டில் மாரடைப்பு மரணங்கள் அதிகரித்து வருகின்றன. குறிப்பாக 35 முதல் 40 வயது வரை உள்ள இளைஞர்கள் மாரடைப்பால் உயிரிழந்து வருகின்றனர். இதுகுறித்து உலக சுகாதார நிறுவனம் ஆய்வு செய்து வருகிறது. தொடரந்து உடற்பயிற்சி செய்வதன் மூலம் மாரடைப்பு மரணங்களை தவிர்க்கலாம்.

ரத்தத்தை எடுத்து படம் வரைந்து காதலனுக்கும் - காதலிக்கும் கொடுப்பது. ரத்தம் மூலம் காதலை வெளிப்படுத்துவது அவசியமற்ற ஒன்று. இதுபோன்று நடவடிக்கையில் ஈடுபட்டால் சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும். எம்ஆர்பி செவிலியர்கள் 4,308 பேர் தேர்வு செய்யும் பணி நடைபெற்று வருகின்றது.

கரோனா காலத்தில் பணியாற்றிய எம்ஆர்பி செவிலியர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். சித்தா, ஹோமியோபதி, ஆயுர்வேதம் ஆகிய பிரிவுகளில் 128 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கான பணி நியமன ஆணை முதலமைச்சர் வழங்குவார் எனத் தெரிவித்தார். அவருடன் எம்எல்ஏக்கள் சந்திரசேகரன், நீலமேகம், மேயர் ராமநாதன் ஆகியோர் இருந்தனர்.

இதையும் படிங்க: தஞ்சாவூர், திருச்சியில் ஐடி முனையம் அமைக்க நடவடிக்கை - அமைச்சர் தங்கம் தென்னரசு

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.