ETV Bharat / state

பிரசவத்திற்காக வந்த பெண்ணுக்கு தவறான சிகிச்சை - அரசு மருத்துவமனையில்  அவலம்!

author img

By

Published : Nov 11, 2019, 12:40 PM IST

தஞ்சாவூர்: கும்பகோணத்தில் அரசு தலைமை மருத்துவமனையில் பிரசவத்திற்கு வந்த பெண்ணுக்கு மருத்துவர்கள் தவறான சிகிச்சை அளித்ததால் அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

GH

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே கோவிந்தபுரத்தைச் சேர்ந்த சத்யராஜ் கூலி தொழில் செய்துவருகிறார். இவரது மனைவி உமா(32). இவருக்கு திருமணமாகி ஆறு வருடங்கள் ஆகின்றன. ஏற்கனவே இவர்களுக்கு பெண் குழந்தை உள்ள நிலையில் இரண்டாவது குழந்தைக்காக நரசிங்கன்பேட்டை ஆரம்ப சுகாதார நிலையத்தில் உமா சிகிச்சை பெற்றுவந்தார்.

கும்பகோணம் அரசு தலைமை மருத்துவமனை

நேற்று கடுமையான பிரசவ வலி காரணமாக ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சென்ற உமாவை கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு அங்குள்ள செவிலியர்கள் அனுப்பி வைத்தனர். பிரசவத்தில் உமாவிற்கு பெண் குழந்தை ஒன்று பிறந்தது. இதனைத் தொடர்ந்து உமா ரத்தப்போக்கால் அவதிப்பட்டதாக கூறப்படுகிறது.

மருத்துவர்கள் உமாவிற்கு தீவிர சிகிச்சை அளித்தபோதும் சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதை அறிந்த கிராம மக்கள், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் முன்னாள் மாவட்ட செயலாளர் விவேகானந்தன் தலைமையில் கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு முன் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

உமா இறப்பிற்கு காரணமாக இருந்த மருத்துவர்கள், செவிலியர்கள் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், உமாவிற்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற காவல் துறையினர் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டு முற்றுகை போராட்டம் கைவிடப்பட்டது. இதனால் சிறிது நேரம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் பரபரப்பு நிலவியது.

இதேபோன்று பிரசவத்திற்காக அரசு மருத்துவமனை வந்து தவறான சிகிச்சை அளிக்கப்பட்ட 3 பேர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: "எனக்கு இயற்கை வியாபாரம்; இணையம் விளம்பரம்" - அசத்தும் 90'ஸ் கிட்ஸ் பெண்!

Intro:தஞ்சாவூர் நவ 11

கும்பகோணத்தில் அரசு தலைமை மருத்துவமனையில் பிரசவத்திற்கு வந்த பெண்ணுக்கு மருத்துவர்கள் தவறான சிகிச்சையால் கூலி தொழிலாளி சத்தியராஜ் மனைவி உமா (32) பெண் உயிரிழப்பு,

மருத்துவர்கள் செவிலியர்கள் கண்டித்து மருத்துவமனை முன்பு ஆர்ப்பாட்டம் மற்றும் மறியல் போராட்டம் நடைபெற்றதுBody:.

தஞ்சாவூர் மாவட்டம்
கும்பகோணம் அருகே கோவிந்தபுரத்தைச் சேர்ந்தவர் சத்யராஜ் கூலி தொழிலாளி
இவரது மனைவி உமா வயது 32
இவருக்கு திருமணமாகி 6 வருடங்கள் ஆகிறது ஏற்கனவே இவருக்கு பெண் குழந்தை உள்ள நிலையில் இரண்டாவது குழந்தைக்காக நரசிங்கன்பேட்டை ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை பெற்று வந்துள்ளனர்
நேற்று கடுமையான பிரசவ வலி காரணமாக ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சென்ற உமாவை கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
அப்போது மருத்துவர்கள் உமாவிற்கு பிரசவம் பார்த்தனர் அப்போது அழகான பெண் குழந்தை ஒன்று பிறந்தது
பின்னர் உமாவிற்கு ரத்தப்போக்கால் அவதிப்பட்டதாக கூறப்படுகிறது அப்போது மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர்
தீவிர சிகிச்சை அளித்தும் உமா பரிதாபமாக இறந்தார்
இதை அறிந்த கோவிந்தபுரம் கிராமமக்கள் விடுதலை சிறுத்தை முன்னாள் மாவட்ட செயலாளர் விவேகானந்தன் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு விரைந்து வந்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி மருத்துவமனையை முற்றுகையிட்டனர்.
உமா இறப்பிற்கு காரணமாக இருந்த மருத்துவர்களையும் செவிலியர்களின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் இதேபோன்று அரசு மருத்துமனை பிரசவத்திற்காக வந்தபோது தவறான சிகிச்சையால் 3 பேர் இருந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது இறந்துபோன உமாவிற்கு தமிழக அரசு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தகவலறிந்த காவல்துறையினர் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர் பேச்சுவார்த்தையில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று வலியுறுத்தியதால் முற்றுகை போராட்டம் கைவிடப்பட்டது.
இதனால் சிறிது நேரம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையை பரபரப்பு நிலவியது.Conclusion:Tanjore sudhakaran 9976644011
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.