ETV Bharat / state

'கோத்தபய ராஜபக்ச இந்தியா வருவதைக் கடுமையாக எதிர்ப்போம்' - திருமுருகன் காந்தி

தஞ்சை: கோத்தபய ராஜபக்ச இலங்கை அதிபராகப் பொறுப்பேற்றிருப்பது ஈழத்தமிழர்களுக்கும் தமிழ்நாட்டுத் தமிழர்களுக்கும் பேராபத்தை ஏற்படுத்தக்கூடியது என்றும் கோத்தபய இந்தியா வருவதை கடுமையாக எதிர்ப்போம் என்றும் மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி தெரிவித்துள்ளார்.

thirumurugan gandhi
author img

By

Published : Nov 21, 2019, 12:42 PM IST

திப்பு சுல்தானும், இந்திய சுதந்திரப்போரும் என்ற தலைப்பில் தஞ்சையில் நடைபெற்ற கருத்தரங்கில் மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி கலந்துகொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "இலங்கையில் தமிழர்களை கொன்று குவித்த கோத்தபய ராஜபக்சவும், மகிந்த ராஜபக்சவும் அதிகாரத்திற்கு வந்திருப்பது தமிழர்களுக்கு பேராபத்தை ஏற்படுத்தக்கூடியது.

ஈழத் தமிழர்களின் உரிமைக்காக இந்திய அரசு சர்வதேச அளவிலும், பிராந்திய அளவிலும் எந்த வித முயற்சியும் எடுக்காததன் விளைவாகத்தான் ராஜபக்ச சகோதரர்கள் அதிகாரத்திற்கு வந்திருக்கிறார்கள். சர்வேதச இனப்படுகொலை குற்றவாளிகளான இவர்கள் சர்வேதசத்தின் துணை இல்லாமல் அதிகாரத்திற்கு வந்திருக்க முடியாது. இது ஈழத்தமிழர்களுக்கு மட்டுமல்லாமல் தமிழ்நாட்டில் உள்ள தமிழர்களுக்கும் ஆபத்தானது.

தமிழர் கடல் ராணுவ கேந்திரமாக மாறும் அபாயம் உள்ளது - திருமுருகன் காந்தி

ராஜபக்ச ஆட்சிக்காலத்தில் தமிழ்நாடு மீனவர்கள் கொல்லப்பட்டதையும் படகுகள் பறிக்கப்பட்டதையும் நாம் மறந்து விடமுடியாது. கோத்தபய ராஜபக்சவின் ஆட்சி சீனாவோடும், அமெரிக்காவோடும் நெருக்கமானது என்பதால், அந்நாட்டு ராணுவம் இலங்கைக்கு வரவழைக்கப்பட்டு இந்தியப் பெருங்கடல் என்று அழைக்கப்படுகிற தமிழர் கடலை ராணுவ கேந்திரமாக மாற்றக்கூடிய ஆபத்து இருக்கிறது. இது தெற்காசிய பிராந்தியத்திற்கே ஆபத்தானது. கோத்தபய ராஜபக்ச இந்தியா வருவதைக் கடுமையாக எதிர்ப்போம்" என்றார்.

இதையும் படிங்க: ’ஜெயலலிதா வழியில் உள்ளாட்சியில் மறைமுகத் தேர்தல்’ - ஓபிஎஸ் கருத்து

Intro:தஞ்சாவூர் நவ 21

இனப்படுகொலை குற்றவாளிகளான ராஐபக்சே சகோதரர்கள் இலங்கையில் அதிகாரத்திற்கு வந்திருப்பது தெங்காசிய பிராந்தியத்திகே ஆபத்தானது என மே 17 இயக்க தலைவர் திருமுருகன் காந்தி கூறியுள்ளார்Body:
திப்புசுல்தானும், இந்திய சுதந்திரபோரும் என்ற தலைப்பில் தஞ்சையில் நடைபெற்ற கருத்தரங்கில் பங்கேற்ற மே 17 இயக்க தலைவர் திருமுருகன்காந்தி அளித்த பேட்டியில், இலங்ககையில் தமிழர்களை கொன்று குவித்த கோத்தபயராஐபக்சேவும், ராஐபக்சேவும் அதிகாரத்துக்கு வந்திருப்பது தமிழர்களுக்கு பேராபத்தை ஏற்படுத்தகூடிய கூட்டணியாக அமைந்திருக்கிறது. ஈழ தழிழர்களின் உரிமைக்காக இந்திய அரசு சர்வதேச அளவிலும், பிராந்திய அளவிலும் எந்தவித முயற்சியும் எடுக்காததன் விளைவாகத்தான் ராஐபக்சே சகோதரர்கள் அதிகாரத்திற்கு வந்திருப்பதற்கு முக்கிய காரணம் என குற்றம்சாட்டிய திருமுருகன்காந்தி, சர்வதேச இனப்படுகொலை குற்றவாளிகளாக இவர்கள் சர்வதேசத்தின் துணை இல்லாமல் அதிகாரத்திற்கு வரமுடியாது, இது ஈழத்தழிழர்களுக்கு மட்டுமலல தமிழகத்தில் உள்ள தமிழர்களுக்கும் ஆபத்தானது என்ற அவர், கடந்த ராஐபக்சே ஆட்சி காலததில் தமிழக மீனவர்களும் கொல்லப்பட்டார்கள் படகுகள் பறிக்கப்பட்டது என்பபதை மறந்துவிட முடியாது. இந்தியாவின் வெளியுறவு கொள்ளை தமிழர்களை எப்படி காப்பாற்ற போகிறது என கவலை தெரிவித்த திருமுருகன்காந்தி, இலங்கையில் கோத்தபய ராஐபக்சேவின் ஆட்சி என்பது சினாவோடும், அமெரிக்காவோடும் நெருக்கமானது என்பதால் அவர்களின் ராணுவத்தை வரவழைப்பார்கள் இந்திய பெருங்கடல் ராணுவகேந்திரமாக மாறக்கூடிய ஆபத்து இருப்பதால் இது தெற்காசிய பிராந்தியத்திற்கே ஆபத்தானது கோத்தபயராஐபக்சே இந்தியா வருவதை கடுமையாக எதிர்ப்போம் எனவும்தெரிவித்தார்.

பேட்டி. திருமுருகன்காந்தி தலைவர் மே 17 இயக்கம்

Conclusion:Tanjore sudhakaran 9976644011
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.