காவிரி டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணையை கடந்த 12ஆம் தேதி முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் திறந்துவைத்தார். மேட்டூர் அணையில் திறக்கப்பட்ட நீர் இன்று (ஜூன் 16) அதிகாலை கல்லணையை வந்தடைந்தது.
இந்நிலையில் கல்லணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்திற்காக இன்று நீர் திறக்கப்பட்டது. கல்லணை திறப்பு நிகழ்ச்சியின்போது கொள்ளிடம் ஆற்றின் உள்பகுதியில் உள்ள கோயிலில் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. அதனைத்தொடர்ந்து வெண்ணாற்றிலும், கல்லணை கால்வாயிலும் நீர் திறக்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், மா. சுப்பிரமணியன், கே.என். நேரு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி, ரகுபதி, எஸ்.எஸ். சிவசங்கர், மெய்யநாதன், காவிரி டெல்டா மாவட்ட ஆட்சியர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள், பொதுப்பணித் துறை, வேளாண் துறை அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
நீர் திறப்பையொட்டி குறுவை சாகுபடி பணிகளில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டுவருகின்றனர்.
இதையும் படிங்க: கர்ணனைப்போல் கங்கை நதியில் மிதந்து வந்த பெண் குழந்தை