தருமபுரி மாவட்டம் பென்னாகரத்தில் புதரில் மலம் கழித்த பட்டியலின சிறுவனை, நில உரிமையாளர் சாதி பெயரை சொல்லி இழிவாக திட்டியதோடு, கையால் மலம் அள்ள வைத்த சம்பவம் பலரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது. 21ஆம் நூற்றாண்டிலும் நிகழும் சாதிய கொடுமைகள் ஆளும் அரசுகளை கேள்வி எழுப்ப வைக்கிறது.
அதேபோன்று பெரியார் அவமதிப்பு சம்பவமும் அடிக்கடி நிகழ்ந்து வருகிறது. இதனைக் கண்டித்து அரசியல் தலவர்கள் கடும் கண்டனங்களை பதிவு செய்தனர். அந்த வகையில், தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில், விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் பெரியார் சிலையை இழிவுப்படுத்திய கயவர்களை கண்டித்து, சுவாமிமலை கடை வீதியில் சட்டப்பேரவை தொகுதி செயலாளர் முல்லைவளவன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் சாதி ஒழிப்பு இயக்கங்களும் கலந்துகொண்டன. அப்போது, பென்னாகரத்தில் ஹரிஹரன் என்ற பட்டியலின சிறுவனை கையால் மலம் அல்ல சொன்ன ஆதிக்க சாதியைச் சேர்ந்த ராஜசேகரை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யக்கோரி கண்டன முழக்கங்களை எழுப்பினர்.
இதையும் படிங்க: கடனைத் திருப்பி செலுத்தாத பெருநிறுவனங்களின் பிணைகள் மீது வங்கிகள் என்ன நடவடிக்கை எடுத்துள்ளன?