தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகில் அதிராம்பட்டினம் காந்திநகரைச் சேர்ந்தவர் சமுத்திரம் மகன் முத்து (18). இவர் நேற்று நள்ளிரவில் அதிவேகமாக இருசக்கர வாகனத்தை ஓட்டிக்கொண்டு கிழக்கு கடற்கரை சாலை வழியாகச் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே சின்னத்தூர் கிராமத்திலிருந்து திருமண நிகழ்ச்சிக்காக மணப்பெண்ணை அழைத்துக்கொண்டு 15 பேர் வேனில் சிவகங்கை நோக்கி சென்று கொண்டிருந்தனர்.
இந்நிலையில், அதிராம்பட்டினம் பேருந்து நிலையம் அருகில் வேன் சென்றுகொண்டிருந்தபோது, வேகமாக வந்த இளைஞரின் இருசக்கர வாகனம் நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டது. இதில், அந்த இளைஞர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். வேன் படிக்கட்டில் அமர்ந்திருந்த சண்முகசுந்தரம் (39) பலத்த காயமடைந்த நிலையில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார்.
இந்த விபத்தில் காயம் அடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.
இதையும் படிங்க: 'ஹலோ சார், எங்க முதலாளிக்கு சீட்டோஸ் வேணுமாம்' - கடையைத் தட்டிய க்யூட் நாய்க்குட்டி