ETV Bharat / state

'மத்திய, மாநில அரசுகள் விவசாய விரோத கொள்கையினையே கொண்டுள்ளனர்..!' - தமிழ்நாடு காவேரி பாதுகாப்பு விவசாயிகள் சங்கம்

மத்திய, மாநில அரசுகள் விவசாய விரோத கொள்கையினையே கொண்டுள்ளனர் என தமிழ்நாடு காவிரி பாதுகாப்பு விவசாயிகள் சங்கத்தினர் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

’மத்திய, மாநில அரசுகள் விவாசாய விரோதக் கொள்கையே கொண்டுள்ளனர்..!’ - தமிழ்நாடு காவேரி பாதுகாப்பு விவசாயிகள் சங்கம்

author img

By

Published : Sep 1, 2022, 5:14 PM IST

தஞ்சாவூர்: நெல் சாகுபடி செய்வதற்கான, செலவீனம் கடந்த ஓராண்டில் மட்டும் 23 விழுக்காடு உயர்ந்துள்ள நிலையில், இன்று(செப்.1) முதல் அமலாகும் நெல்லிற்கான குறைந்தபட்ச விலையை, கடந்த ஆண்டை விட தமிழ்நாடு அரசு, குவிண்டாலுக்கு சன்ன ரகத்திற்கு ரூபாய் நூறும், பொது ரகத்திற்கு ரூபாய் 75-ம் உயர்த்தியிருப்பது உழவர்களை பெரிய அளவில் ஏமாற்றமடைய செய்துள்ளது.

எனவே, இதனை மறுபரிசீலனை செய்து தமிழ்நாட்டை ஆளும் திமுக தனது தேர்தல் வாக்குறுதிபடியின்படி குவிண்டால் ஒன்றுக்கு ரூபாய் 2,500ஆக ஆதார விலையினை நிர்ணயம் செய்து அறிவிக்க, தமிழ்நாடு காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் அரசிற்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து, “நெல்லிற்கான குறைந்தபட்ச ஆதரவு விலையினை அறிவிப்பதில் மத்திய, மாநில அரசுகள் தொடர்ந்து விவசாய விரோத கொள்கையையே கொண்டுள்ளது.

மத்திய அரசு, எம்.எஸ்.சுவாமிநாதன் அறிக்கையைப் பின்பற்றி விலையை அறிவிப்பதில்லை. அதுபோலவே, தற்போது தமிழ்நாட்டை ஆளும் திமுக அரசும், அது அளித்த தேர்தல் வாக்குறுதியின்படி குவிண்டால் நெல்லிற்கு ரூபாய் 2,500ஆக அறிவிக்க முன்வராதது கண்டனத்திற்குரியது.

கடந்த ஆண்டு சன்னரக விலை குவிண்டால் ஒன்றுக்கு நேற்று வரை ரூபாய் 2,060ஆக இருந்ததை தமிழ்நாடு அரசு ரூபாய் 100 மட்டும் உயர்த்தி ஊக்கத்தொகையாக அறிவித்ததைத்தொடர்ந்து இதன் விலை ரூபாய் 2,160ஆக உயர்ந்துள்ளது.

அதுபோலவே ரூபாய் 2,040ஆக நேற்று வரை இருந்த பொது ரகத்திற்கு, தமிழ்நாடு அரசு ஊக்கத் தொகையாக 75 ரூபாய் அறிவித்துள்ளதைத்தொடர்ந்து ரூபாய் 2,115ஆக உயர்ந்துள்ளது. இந்த விலைகள் இன்று(செப்.1) முதல் வரும் 2023 ஆகஸ்ட் 31 வரை அமலில் இருக்கும். இந்த விலை உயர்வினால் விவசாயிகளுக்கு நன்மை எதுவும் கிடைக்கப்போவதில்லை.

இவை தமிழ்நாடு அரசின் நுகர்பொருள் வாணிபக்கழகத்தின் மூலம் இயங்கும் அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகள் நெல் விற்பனை செய்ய அங்குள்ள ஊழியர்களுக்கு விவசாயிகளால் வழங்கப்படும் லஞ்சத்தொகைக்குத் தான் பயன்படும்.

இதற்குக் காரணம் கடந்த ஓராண்டில் மட்டும் நெல் சாகுபடிக்கான செலவீனங்கள் ஆட்கள் கூலி, விதை விலை உயர்வு, இடுபொருட்கள் விலை ஏற்றம், டீசல் விலை உயர்வு என சுமார் 23 விழுக்காடு அளவிற்கு உயர்ந்துள்ளது.

'மத்திய, மாநில அரசுகள் விவசாய விரோத கொள்கையினையே கொண்டுள்ளனர்..!'

எனவே, இதனை தமிழ்நாடு அரசு மறுபரிசீலனை செய்து, திமுக அளித்த தேர்தல் வாக்குறுதியின்படி குறைந்தபட்சம் குவிண்டால் ஒன்றுக்கு ரூபாய் 2,500ஆக அறிவித்திட வேண்டும். நம்முடைய அண்டை மாநிலமான கேரள மாநில அரசு குவிண்டால் ஒன்றுக்கு ரூபாய் 2,840ஆக அறிவித்துள்ளது. சட்டீஸ்கர் மாநிலம், குவிண்டால் ஒன்றுக்கு ரூபாய் 2,540ஆகவும் விலை நிர்ணயித்துள்ளது.

எனவே, இந்த விலை உயர்வு என்பது மிக சொற்பமாகவுள்ளது. இது கண்டிக்கத்தக்கது. ஆகையால், புதிய விலையை விரைவில் அறிவிக்க தமிழ்நாடு அரசு முன்வர வேண்டும்” என தமிழ்நாடு காவிரி விவசாயிகள் பாதுகாப்புச் சங்கத்தினர் அரசிற்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதையும் படிங்க: Video...கும்பகோணத்தில் விநாயகர் சிலைக்கு ரூ.11 லட்சம் பணநோட்டுகளைக்கொண்டு அலங்காரம்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.