தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகில் உள்ள பள்ளிகொண்டான் காட்டாற்று பகுதியில் மணல் திருட்டில் சிலர் ஈடுபடுவதாக வருவாய்த் துறை அலுவலர்களுக்குத் தகவல் கிடைத்துள்ளது. அத்தகவலின் பேரில் பட்டுக்கோட்டை சார் ஆட்சியர் கிலாஸ்டன் புஷ்பராஜ் தலைமையில் வருவாய்த் துறையினர் சம்பவ இடத்துக்குச் சென்று மணல் திருட்டில் ஈடுபட்ட இரண்டு லாரிகளை பறிமுதல் செய்துள்ளனர்.
இதனையடுத்து மணல் திருட்டில் ஈடுபட்டவர்கள், அதே ஊரைச் சேர்ந்த ஆனந்த் என்பவர்தான் தங்களைப் பற்றி தலவல் கொடுத்துள்ளார் என எண்ணி, ஆயுதங்களால் அவரைச் சரமாரியாகத் தாக்கியுள்ளனர். இதைத் தொடர்ந்து, உயிருக்கு ஆபத்தான நிலையில் ஆனந்தை மீட்ட அவரது உறவினர்கள், பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.
ஆனால் அவரின் உடல்நிலை மோசமைடையவே மேல் சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மேலும் ஆனந்த் தாக்கப்பட்டது தொடர்பாக வழக்கு பதிவு செய்த அதிராம்பட்டினம் காவல் துறையினர் குற்றவாளிகளைத் தேடி வருகின்றனர்.
இதையும் படிங்க:ஓட்டுநர்களிடையே மோதல்: உதகையில் ஆட்டோக்கள் ஓடாததால் பொதுமக்கள் பாதிப்பு