ETV Bharat / state

22% ஈரப்பதமுள்ள நெல் கொள்முதலை நிரந்தரமாக்க வேண்டும் - மத்திய குழுவிடம் விவசாயிகள் வலியுறுத்தல் - Farmers demand

தஞ்சாவூர் மாவட்டத்தில் நெல்லின் ஈரப்பதத்தை 22% கொள்முதல் செய்ய நிரந்தர அறிவிப்பை வெளியிட பரிந்துரை செய்ய வேண்டும் என நெல்லின் ஈரப்பதம் குறித்து ஆய்வு செய்ய வந்த மத்திய குழுவினரிடம் விவசாயிகள் வலியுறுத்தினர்.

22% நெல் கொள்முததல் நிரந்தரமாக்கவேண்டும்- மத்தியக் குழுவிடம் விவசாயிகள் வலியுறுத்தல்

author img

By

Published : Feb 9, 2023, 10:47 PM IST

22% ஈரப்பதமுள்ள நெல் கொள்முதலை நிரந்தரமாக்க வேண்டும் - மத்திய குழுவிடம் விவசாயிகள் வலியுறுத்தல்

தஞ்சாவூர் மாவட்டத்தில் பருவம் தவறி பெய்த கன மழையின் காரணமாக தஞ்சை உள்ளிட்ட டெல்டா மாவட்டத்தில் அறுவடைக்கு தயாராக இருந்த ஆயிரக்கணக்கான ஏக்கரில் சம்பா, தாளடி நெற்பயிர்கள் மழைநீரில் மூழ்கி சாய்ந்து சேதமடைந்துள்ளன.

தமிழ்நாடு அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் நெல்லின் ஈரப்பதம் 17% சதவீதம் இருக்க வேண்டும் என நிபந்தனை உள்ளது. ஆனால், தற்போது நெல்லின் ஈரப்பதம் 22% சதவீதத்திற்கும் மேல் உள்ளது. இதனையடுத்து விவசாயிகள் 22% சதவீதம் ஈரப்பதம் வரை நெல் கொள்முதல் செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.

விவசாயிகளின் கோரிக்கைகளின்படி தமிழ்நாடு முதலமைச்சர் மத்திய அரசுக்கு கடிதம் எழுதியதன் அடிப்படையில் மத்தியக்குழுவினர், தஞ்சாவூர் மாவட்டத்தில் அருள்மொழிப்பேட்டையில் உள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் சென்னை தரக்கட்டுப்பாட்டு மையத்தின் தொழில் நுட்ப அதிகாரி யூனூஸ், பெங்களூரு தரக்கட்டுப்பாட்டு மையத்தின் தொழில் நுட்ப அதிகாரிகள் பிரபாகரன், ஒய் போயோ ஆகிய குழுவினர் மற்றும் மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் ஆகியோர் நெல் கொள்முதல் நிலையத்தில் ஆய்வு செய்தனர்.

பின்னர், விவசாயிகளிடம் கோரிக்கையை கேட்டறிந்து நெல்லை டெஸ்ட் செய்து மாதிரிகளை எடுத்துச்சென்றனர். இதுகுறித்து செய்தியாளர்களிடம் கூறிய மாவட்ட ஆட்சியர், 'தஞ்சாவூர் மாவட்டத்தில் பருவம் தவறிய மழையால் 12 ஆயிரம் ஹெக்டேருக்கும் மேல் நெற்கதிர்கள் பாதிக்கப்பட்டுள்ளன. நெல் கொள்முதலில் ஈரப்பதம் தளர்வு வேண்டுமென்று விவசாயிகள் கோரிக்கை வைத்ததன் அடிப்படையில் முதலமைச்சர் முயற்சியால் மத்திய குழுவினர் ஆய்வு செய்து வருகின்றனர். ஆய்வின் முடிவுகளை தலைமை அலுவலகத்திற்கு இன்று(பிப்.09) அனுப்பி வைப்பார்கள், விவசாயிகளிடம் 22 சதவீதம் ஈரப்பதம் தளர்வு வேண்டும் என்பதே கோரிக்கையாக உள்ளது’ என்று தெரிவித்தார்.

விவசாயிகள் கூறும்போது, ’நிரந்தரமாக 22 சதவீதம் ஈரப்பதம் நெல் கொள்முதல் செய்ய வேண்டும், தமிழ்நாடு அரசு அறிவித்த இழப்பீட்டுத் தொகையை மறு பரிசீலனை செய்து இழப்பீட்டுத் தொகையை உயர்த்தி வழங்க வேண்டும்’ என்று கோரிக்கை வைக்கின்றனர்.

இதனைத் தொடர்ந்து பொய்யுண்டார்குடிகாடு, பாப்பாநாடு, அலிவலம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் மத்திய குழுவினர் ஆய்வு செய்கின்றனர். இந்த ஆய்வின் போது நுகர்பொருள் வாணிப கழக முதுநிலை மண்டல மேலாளர் உமாமகேஸ்வரி உள்ளிட்ட அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இதையும் படிங்க:ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் - அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் ஓட்டு யாருக்கு?

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.