ETV Bharat / state

24 பெருமாள் கருட சேவை தரிசனம்.. மக்கள் வெள்ளத்தில் மிதந்த தஞ்சை! - ராஜராஜ சமய சங்கம்

தஞ்சாவூரில் பிரசித்தி பெற்ற 24 பெருமாள்கள் கருடச் சேவை வெகு விமரிசையாக நடைபெற்றது. இதில் பல்லாயிரக்கணக்கான மக்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.

24 பெருமாள்கள் கருட சேவை
perumal garuda sevai
author img

By

Published : Jun 9, 2023, 4:55 PM IST

Updated : Jun 9, 2023, 5:33 PM IST

24 பெருமாள் கருட சேவை!

தஞ்சாவூர்: தமிழ்நாடு அரசு இந்து சமய அறநிலையத் துறை மற்றும் தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தானத்திற்கு உட்பட்ட 88 திருக்கோவில்களில் உள்ள பெருமாள் கோவில்களிலிருந்து சுவாமிகள் அலங்கரிக்கப்பட்டு பல்லாக்குகளில் எழுந்தருளி கருட வாகனத்தில் 24 பெருமாள்கள் கருட சேவை புறப்பாடு வெகு விமரிசையாக நடைபெற்றது.

தஞ்சாவூரில் ஆண்டுதோறும் வைகாசி மாதம் கருட சேவை புறப்பாடு நடைபெற்று வருகிறது. அதைப்போல் இந்தாண்டும் 89வது ஆண்டாக 24 கருட மகோத்சவம் நேற்று ஜுன் 8 ந் தொடங்கியது, நான்கு நாட்கள் நடைபெறும்.

இவ்விழாவில் முதல் நாள் நேற்று வெண்ணாற்றங்கரை ஸ்ரீ நரசிம்ம பெருமாள் சன்னதியில் திவ்ய தேசப் பெருமாள்களுக்குத் திருமங்கை ஆழ்வார் மங்களாசாசனம் நடைபெற்று கருட சேவை விழா துவங்கியது, இதனையடுத்து இன்று 24 பெருமாள்கள் கருடசேவை புறப்பாடு அதிவிமரிசையாக தஞ்சாவூரில் நடைபெற்றது.

தஞ்சாவூர் வெண்ணாற்றங்கரையிலிருந்து திவ்ய தேச பெருமாள்களுடன் கருட வாகனத்தில் ஸ்ரீ நீலமேகப்பெருமாள், ஸ்ரீ நரசிம்ம பெருமாள், ஸ்ரீமணிகுன்னப் பெருமாள், ஸ்ரீ கல்யாண வெங்கடேச பெருமாள், ஸ்ரீ யாதவ கண்ணன், ஸ்ரீ யோக நரசிம்ம பெருமாள், ஸ்ரீ கோதண்டராமர், ஸ்ரீ வரதராஜ பெருமாள், ஸ்ரீ பிரசன்ன வேங்கடேச பெருமாள் உள்ளிட்ட 24 பெருமாள் கோவில்களிலிருந்து கருட வாகனத்தில் சுவாமி மங்கல வாத்தியங்கள் இசைக்கப் புறப்பட்டு தஞ்சை நகரின் முக்கிய ராஜவீதிகளான கீழவீதி, தெற்குவீதி, மேலவீதி, வடக்குவீதி ஆகிய தேரோடும் ராஜ வீதிகளில் ஒன்றன் பின் ஒன்றாக வலம் வந்து சேவை அருள் பாலித்தனர்.

இதையும் படிங்க: குடிக்க பணம் இல்லாததால் கோயில் உண்டியல் உடைப்பு.. இளைஞருக்கு தர்ம அடி..

இந்த கருட சேவையில் பஜனை பாடல்களைப் பாடியும், ஆடியும், கிருஷ்ணர் வேடம் அணிந்தும் பக்தர்கள் சென்றனர். இந்த பெருமாள் கருட சேவையில் ஏராளமான பொதுமக்கள், பக்தர்கள் சுவாமியை வணங்கி தரிசனம் செய்தனர்.

திருப்பதிக்கு அடுத்தபடியாக 24 பெருமாள் கருடசேவை வேறெங்கும் காணக் கிடைக்காத காட்சியாகும் இங்கு மட்டுமே 24 பெருமாள் கருட சேவை ஆண்டுதோறும் நடைபெறுவது குறிப்பிடத்தக்கது, இதனைத் தொடர்ந்து ஜூன் 10 ந் தேதி நாளை வெண்ணாற்றங்கரையிலிருந்து 15 நவநீத சேவை வெண்ணெய்த் தாழி உற்சவத்தில் சுவாமிகள் புறப்பட்டு நான்கு ராஜவீதிகளில் வீதி உலா நடைபெறும்.

மேலும் இன்றும், நாளையும் ராஜராஜ சமய சங்கத்தில் திருவாய்மொழி நிகழ்ச்சியும் நடைபெறும், நாளை மறுநாள் 11ந் தேதி விடையாற்றி உற்சவம் நடைபெற்று விழா நிறைவு பெறும், இந்த இரண்டு நாட்கள் நடைபெறும் கருட சேவை, நவநீத சேவை வழிபாட்டில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்வார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:LGM Teaser: பெரும் வரவேற்பை பெறும் எல்ஜிஎம் டீசர்

Last Updated : Jun 9, 2023, 5:33 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.