ETV Bharat / state

சிறுமியை கர்ப்பமாக்கிய இளைஞருக்கு 25 ஆண்டுகள் சிறை! - today Thanjavur news

சிறுமியை கர்ப்பமாக்கிய இளைஞருக்கு 25 ஆண்டுகள் சிறை மற்றும் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த காதலனுக்கு 20 ஆண்டு சிறை தண்டனை விதித்து தஞ்சை போக்சோ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சிறுமியை கர்ப்பமாக்கிய இளைஞருக்கு 25 ஆண்டுகள் சிறை!

author img

By

Published : Feb 15, 2023, 2:04 PM IST

தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த 27 வயது இளைஞர், கடந்த 2018ஆம் ஆண்டு 16 வயது சிறுமியை காதலித்து வந்தார். அப்போது அந்த சிறுமியிடம் திருமணம் செய்வதாக கூறி, அவருக்கு பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். இந்த நிலையில் 32 வயது ஆடவர் ஒருவர், சிறுமியின் அண்ணனை பார்க்க வந்துள்ளார். அப்போது சிறுமியின் காதல் விவகாரம் அவருக்கு தெரிய வந்துள்ளது.

இதனையடுத்து அவரும் சிறுமியை மிரட்டி, சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். இந்த நிலையில் சிறுமி கர்ப்பம் ஆகியுள்ளார். இதனைத்தொடர்ந்து தனது காதலனிடம், தான் கர்ப்பமாக இருப்பதாகவும், தன்னை உடனடியாக திருமணம் செய்து கொள்ளுமாறும் கூறியுள்ளார். அதற்கு அவர் மறுத்துள்ளளார்.

இதனையடுத்து அருகில் உள்ள அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் சிறுமி புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்த காவல் துறையினர், சிறுமியின் கர்ப்பத்திற்கு காரணமான நபரை கண்டறிய டிஎன்ஏ சோதனை செய்துள்ளனர். இதில் சிறுமியின் அண்ணனைப் பார்க்க வந்த 32 வயது ஆடவரே சிறுமியின் கர்ப்பத்துக்கு காரணம் என தெரிய வந்தது.

இதனையடுத்து இரண்டு பேரையும் காவல் துறையினர் கைது செய்தனர். பின்னர் இது தொடர்பான வழக்கு தஞ்சை போக்சோ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த நிலையில் நேற்று (பிப்.14) நீதிபதி சுந்தர்ராஜன், “சிறுமியை கர்ப்பமாக்கிய 32 வயது (அப்போதைய வயது) ஆடவருக்கு 25 ஆண்டுகள் சிறை தண்டனையும், 80,000 ரூபாய் அபராதமும் விதிக்கப்படுகிறது.

அதேபோல் சிறுமியை காதலித்து பாலியல் தொந்தரவு கொடுத்த 27 வயது (அப்போதைய வயது) இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனையும் 50,000 ரூபாய் அபராதமும் விதிக்கப்படுகிறது. மேலும் அபராதத்தொகையை கட்ட தவறினால், இரண்டு பேருக்கும் மேலும் ஒரு ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்படும்” என உத்தரவிட்டுள்ளார்.

இதையும் படிங்க: தாலியை கழற்றி வைத்துவிட்டு புதுப்பெண் எஸ்கேப்.. திருச்சியில் நடந்தது என்ன?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.