தஞ்சையில் அமமுக மாநகர மாணவர் அணியின் சார்பில் நடைபெற்ற நிலவேம்பு கசாயம் வழங்கும் விழாவில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கலந்துகொண்டார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், 'இடைத்தேர்தலில் பணபலம் வென்று வருகிறது. அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் துரோகிகளுடன் இணைவதற்கு வாய்ப்பே இல்லை.
சசிகலா உரிய நேரத்தில் பெங்களூரு சிறையிலிருந்து வெளியே வந்தால் அதிமுக ஆட்சியில் எந்த மாற்றமும் வராது, இந்த அரசு முடிந்தவுடன் அதிமுக காணாமல் போய்விடும்' என தெரிவித்தார்.
இதையும் படிங்க:
தஞ்சையில் இருந்து கோடியக்கரைக்கு கொண்டுசெல்லப்பட்ட மூன்று புள்ளி மான்கள் மாயம்!