தமிழ்நாட்டில் இன்று புதிதாக 5,560 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் மாநிலத்தில் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5.25 லட்சமாக அதிகரித்துள்ளது.
இதில் தஞ்சாவூர் மாவட்டத்தில் மட்டும் இன்று 155 பேருக்கு கரோனா தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் மாவட்டத்தில் 8,899 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் தஞ்சை மருத்துவமனை மருத்துவக் கல்லூரியில் தற்போது 1,019 பேர் சிகிச்சைப்பெற்று வரும் நிலையில், சிகிச்சைப் பலனின்றி 138 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர்.