இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், பருவ மழை பெய்யும் காலங்களில் நீரை சேமித்து விவசாயம் செய்ய ஏதுவாக தமிழ்நாடு அரசின் வேளாண் பொறியியல்துறை சார்பில் விவசாயிகளுக்கு 100 சதவீத மானியத்துடன் பண்ணை குட்டைகள் அமைத்துக் கொடுக்க உள்ளன. இந்த திட்டத்தில் தஞ்சாவூர் மாவட்டத்தில் மட்டும் விவசாயிகளுக்கு ரூ.8 கோடி மதிப்பீட்டில் சுமார் 800 பண்ணைக் குட்டைகள் அமைக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
எனவே, தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள விவசாயிகள் இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என குறிப்பிட்டுள்ளார். மேலும், விவரங்களை பெற பட்டுக்கோட்டை, கும்பகோணம் பகுதி விவசாயிகள் தங்களது வேளாண் பொறியியல் துறையை சார்ந்த அலுவலர்களை அணுகலாம் என தெரிவித்துள்ளார்.