ETV Bharat / state

மூன்று லாரியில் மணல் கடத்தல் - மூவர் கைது

author img

By

Published : Jul 27, 2021, 7:22 AM IST

பூதலூர் அருகே அரசு அனுமதியின்றி மணல் எடுத்து சென்ற 3 லாரிகள் பறிமுதல் செய்யப்பட்டன.

லாரியில் மணல் கடத்தல்
லாரியில் மணல் கடத்தல்

தஞ்சை : பூதலூர் அருகே ஒரத்தூர் நத்தமங்கலத்தைச் சேர்ந்தவர்கள் கதிர் அழகன், அறிவழகன்.

இவர்களுக்கு சொந்தமான இடத்தில் இருந்து நேற்று(ஜூலை 26) 3 லாரிகளில் அரசு அனுமதியின்றி மணல் எடுத்து வருவதை தெரிந்துகொண்ட அப்பகுதிமக்கள், லாரியை வழிமறித்தனர். இதுதொடர்பாக தொண்டராயன்பட்டி கிராம நிர்வாக அலுவலர் சுதாவிற்கு தெரியப்படுத்தினர்.

சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற அலுலவர் சுதா 3 லாரிகளையும் பறிமுதல் செய்தார். அதை ஓட்டிவந்த செங்கிப்பட்டி நடுத்தெருவைச் சேர்ந்த ராஜ்குமார், பூதராய நல்லூர் தெற்கு தெருவைச் சேர்ந்த சிவகுமார், வல்லம் அய்யனார் கோவில் தெருவைச் சேர்ந்த ராமலிங்கம் ஆகிய மூவரையும் பூதலூர் காவல்நிலையத்தில் ஒப்படைத்தார்.

இது குறித்து துணை ஆய்வாளர் ஜெகஜீவன் வழக்குப்பதிவு செய்து, மூவரையும் விசாரித்து வருகின்றனர். பிடிபட்ட லாரியில் குடிமைப்பொருள் மிக அவசரம் என்று அரசு ஸ்டிக்கர் ஒட்டி இருந்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: போக்குவரத்துக் கழகங்களில் ஓய்வுபெற்ற ஊழியர்களை பணியமர்த்த தடை

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.