தஞ்சாவூர்: வல்லம் சிறப்பு உதவி ஆய்வாளர் சந்திரசேகரன் தலைமையிலான காவல்துறையினர், தஞ்சாவூர் - புதுக்கோட்டை சாலையில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது அந்த வழியாக வந்த மினிலோடு வேனை தடுத்து நிறுத்தி காவல்துறையினர் சோதனை மேற்கொண்டனர். அதில் மூட்டை மூட்டையாக குட்கா, பான்மசாலா உள்ளிட்ட பொருள்கள் இருப்பதை காவல்துறையினர் கண்டுபிடித்தனர்.

இதனையடுத்து 1,880 கிலோ எடையுள்ள குட்கா, பான்மசாலாவை கடத்த முயன்ற மினிலோடு வேனை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.
மேலும் தடை செய்யப்பட்ட பொருள்களை கடத்தி வந்த புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த பிரபு, சூர்யகுமார், ஒரத்தநாடு பகுதியை சேர்ந்த அருண்குமார் ஆகிய மூன்று பேரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: குடியரசுத் தலைவரை சந்தித்த பிரதமர் மோடி