கரோனா வைரசைக் கட்டுப்படுத்தும்விதமாக நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், தமிழ்நாடு அரசு அனைத்து மதுபான கடைகள், மதுபான பார்களை மூட உத்தரவிட்டது. அதன்படி, அனைத்து மதுபான கடைகளும், பார்களும் மாலை 6 மணிக்கு மூடப்பட்டன.
இந்நிலையில், தஞ்சையில் சாந்தபிள்ளை கேட் அருகே சட்டவிரோதமாக மது விற்பனை செய்வதாகக் காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதனடிப்படையில், காவல் துறையினர் சோதனைசெய்தனர். அதில் இரண்டாயிரம் மதுபாட்டில்கள், 52 ஆயிரம் ரூபாய் ஆகியவை பறிமுதல்செய்யப்பட்டது.
இதையும் படிங்க:காரில் கடத்தி வரப்பட்ட பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள மதுபானங்கள் பறிமுதல்