தஞ்சாவூர் மாவட்டத்தில், சமூகப் பாதுகாப்புத்துறையின் கீழ் இயங்கும் அரசு, அரசு நிதியுதவி பெறும் குழந்தைகள் இல்லங்களில் உள்ள மாணவ மாணவிகளுக்கு விளையாட்டுப் போட்டிகள், கலை நிகழ்ச்சிகள் அன்னை சத்யா விளையாட்டரங்கில் நடைபெற்றது. இப்போட்டிகளில் திண்டுக்கல், திருச்சி, புதுக்கோட்டை, சிவகங்கை, தஞ்சாவூர், அரியலூர், திருவாரூர், நாகப்பட்டினம் உள்ளிட்ட மாவட்டங்களிலிருந்து குழந்தைகள் இல்லத்தினைச் சேர்ந்த 900க்கும் மேற்பட்ட குழந்தைகள் கலந்து கொண்டனர்.
இந்தப் போட்டியானது, வயது வரம்பு அடிப்படையில் தனித்தனியாக நடத்தப்பட்டன. இதில் 100 மீ, 200 மீ, 400 மீ ஓட்டப்பந்தயம், 400 மீ தொடர் ஓட்டம், நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், பூப்பந்து, கைப்பந்து, கோகோ, கபடி உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்பட்டன. இதனைத் தொடர்ந்து, நேற்று போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கான பரிசளிப்பு விழா நடந்தது.
அதற்கு தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் கோவிந்தராவ் தலைமை தாங்கி, வெற்றி பெற்ற குழந்தைகளுக்குப் பரிசுகள் வழங்கி வாழ்த்துகளைத் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில், குழந்தைகள் இல்ல கண்காணிப்பாளர் சௌந்தரராஜன், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் நடராசன், மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுச் செயலர் சுதா, தமிழ்நாடு குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணைய உறுப்பினரும் குழந்தைகள் நலக்குழு தலைவருமான திலகவதி, குழந்தைகள் நலக்குழு உறுப்பினர்கள், மாவட்ட விளையாட்டு அலுவலர் பாபு ஆகியோர் கலந்து கொண்டனர். மேலும் இந்த விளையாட்டுப் போட்டியானது சனி, ஞாயிறு ஆகிய இரண்டு நாள்கள் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: