ETV Bharat / state

விவசாயத்திற்கென தனி பட்ஜெட் வழங்கப்படுமா? - விவசாயிகள் கோரிக்கை - விவசாயத்திற்கென தனிபட்ஜெட்

திருவாரூர்: 2020ஆம் ஆண்டிற்கான மத்திய பட்ஜெட்டில் விவசாயத்திற்கென தனி பட்ஜெட் கொண்டுவர வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை வைக்கின்றனர்.

விவசாயத்திற்கென தனிபட்ஜெட் கேட்டு திருவாரூர் விவசாயிகள் கோரிக்கை
விவசாயத்திற்கென தனிபட்ஜெட் கேட்டு திருவாரூர் விவசாயிகள் கோரிக்கை
author img

By

Published : Jan 27, 2020, 8:04 AM IST

மத்திய அரசின் பட்ஜெட் வருகின்ற பிப்ரவரி 1ஆம் தேதி தாக்கல் செய்யப்பட உள்ளது. இந்த பட்ஜெட்டில் வருமான வரி குறைப்பு, ஜிஎஸ்டி வரி குறைப்பு உள்ளிட்ட பல்வேறு அறிவிப்புகள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், இந்த ஆண்டு பட்ஜெட்டில் தங்களின் சில கோரிக்கைகள் நிறைவேற்றப்பட வேண்டும் என்ற எதிர்பார்ப்பில் டெல்டா பகுதி விவசாயிகள் காத்திருக்கின்றனர்.

அவைகள் பின்வருமாறு,

  • மத்திய அரசு விவசாயத்திற்கென தனிபட்ஜெட் கொண்டு வர வேண்டும். நெல் குவிண்டால் ஒன்றுக்கு குறைந்தபட்ச விலையாக 2500 ரூபாய் நிர்ணயம் செய்யப்பட வேண்டும். அல்லது நெல்லுக்கான உற்பத்தி செலவுடன் 50 சதவீதம் லாபம் சேர்த்து கொள்முதல் விலையை நிர்ணயிக்க வேண்டும் என்ற எம்.எஸ். சுவாமிநாதன் குழுவின் பரிந்துரையை ஏற்க வேண்டும்.
    விவசாயத்திற்கென தனி பட்ஜெட் கேட்டு திருவாரூர் விவசாயிகள் கோரிக்கை
  • பேரிடர் காலங்களில் விவசாய நிலங்களில் பாதிப்பு ஏற்பட்டால் அதை ஈடு செய்ய தனியார் நிறுவனத்திடம் இன்சூரன்ஸ் செய்யப்படுவதைத் தவிர்த்து மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள பொதுத்துறை நிறுவனங்களிடம் விவசாயிகளுக்கான இன்சூரன்ஸ் வழங்க உறுதி செய்ய வேண்டும்.
  • கால்நடைகளை பராமரிப்பதற்கும், கால்நடைகளை காப்பீடு செய்வதற்குமான வழிமுறைகள் குறைந்து வருவதால் நாட்டு மாடுகளை வளர்த்தெடுப்பதற்கான வழிவகைகளை ஏற்படுத்தி தர வேண்டும்.
  • பாரம்பரிய இயற்கை விவசாயம் செய்யும் விவசாயிகளை ஊக்குவிக்க வேண்டும், விவசாயிகள் கையில் விதைகள் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். செயற்கை விவசாயம் செய்யும் விவசாயிகளுக்கு கொடுக்கக்கூடிய இழப்பீடுகளை பாரம்பரிய விவசாயிகளுக்கு கொடுக்க முன்வர வேண்டும்.

இதையும் படிங்க: பட்ஜெட் 2020: பொருளாதாரத்தை சரிசெய்ய மின் வாகன உற்பத்தியில் கவனம் தேவை

Intro:

Body:
2020 ஆம் ஆண்டிற்கான மத்திய பட்ஜெட்டில் விவசாயிகளின் கோரிக்கை.

பொருளாதார மந்தநிலையை மேம்படுத்துவது, வேலையின்மை ஒழிப்பது உள்ளிட்ட பல்வேறு சவால்களுக்கிடையே 2020 மத்திய பட்ஜெட் பிப்ரவரி 1ம் தேதி நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட உள்ளது. மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்யும் இரண்டாது பட்ஜெட் என்ற அடிப்படையிலும் பொருளாதார மந்தநிலை மேம்படுத்தப்படுமா, வருமான வரி குறைப்பு, ஜிஎஸ்டி வரி குறைப்பு என பல்வேறு கோரிக்கைகள் இந்த பட்ஜெட்டில் எதிர்பாக்கபடுகிறது.

மேலும் தமிழகத்தில் 80சதவிகிதம் உணவு தேவையை பூர்த்தி செய்யக்கூடிய விவசாயிம் நிறைந்து காணப்படும் டெல்டா பகுதி விவசாயிகள் வரக்கூடிய மத்திய பட்ஜெட்டில் சில கோரிக்கைகளை வலியுறுத்தி எதிர்பார்ப்புடன் இருக்கின்றனர்.

முதலில் மத்திய அரசு விவசாயத்திற்கென தனிபட்ஜெட் கொண்டு வர வேண்டும். தங்களின் நீண்ட கால கோரிக்கையாக நெல் குவிண்டால் ஒன்றுக்கு குறைந்தபட்ச விலையாக ரூ2500 நிர்ணயம் செய்ய வேண்டும். அல்லது நெல் சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு ஓரளவாவது லாபம் கிடைக்க வேண்டுமானால் நெல்லுக்கான உற்பத்தி செலவுடன் 50 சதவீதம் லாபம் சேர்த்து கொள்முதல் விலையை நிர்ணயிக்கப்பட வேண்டும் என்ற எம்.எஸ் சுவாமிநாதன் குழுவின் பரிந்துரையை ஏற்க வேண்டும்.அதாவது மத்திய அரசு குழு கொடுத்துள்ள தகவலையாவது மத்திய அரசு எற்று செயல்படுத்த வேண்டும்.

பேரிடர் காலங்களில் விவசாய நிலங்களில் பாதிப்பு ஏற்பட்டால் அதை ஈடு செய்ய தனியார் இன்சூரன்ஸ் நிறுவனத்திடம் ஒப்படைதுள்ளனர். இதனை தவிர்த்து
மத்தியரசின் கட்டுப்பாட்டில் உள்ள பொதுதுறை நிறுவனங்களிடம் விவசாயிகளுக்கான இன்சூரன்ஸ் செய்யப்படுவதை உறுதி செய்ய வேண்டும்.

கால்நடைகளை பராமரிப்பதற்கும், கால்நடைகளை காப்பீடு செய்வதற்குமான வழிமுறைகள் குறைந்து வருகிறது. நாட்டு மாடுகளை வளர்த்தெடுப்பதற்கான வழிவகைகளை ஏற்படுத்தி தர வேண்டும்.

பாரம்பரிய இயற்கை விவசாயம் செய்யும் விவசாயிகளை ஊக்குவிக்க வேண்டும், விவசாயிகள் கையில் விதைகள் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். செயற்கை விவசாயம் செய்யும் விவசாயிகளுக்கு கொடுக்கூடிய இழப்பீடுகளை பாரம்பரிய விவசாயிகளுக்கு கொடுக்க முன்வர வேண்டும். பன்னாட்டு விதைகளை ஒழித்து பாரம்பரிய இயற்கை விவசாயத்தை முன்னெடுக்க வேண்டும் என்பது போன்ற கோரிக்கைகளை முன்வைத்து இந்த ஆண்டுக்கான பட்ஜெட்டை விவசாயிகள் எதிர்பார்த்துள்ளனர்.

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.