திருவையாறில் ஸ்ரீ தியாகராஜர் சுவாமிகளின் 174ஆவது ஆராதனை விழா நேற்று மாலை (பிப். 01) 4.30 மங்கள் இசையுடன் தொடங்கியது. அதைத் தொடர்ந்து 5 மணிக்கு 174ஆவது ஆராதனை தொடக்க விழா நடைபெற்றது.
தொடர்ந்து இன்று (பிப். 02) காலை 5.30 மணிக்கு உஞ்சவிருத்தி பஜனை நடந்தது. விழா பந்தலில் 8.30 மணி முதல் 9.00 மணி வரை நாதஸ்வர இசை நிகழ்ச்சி நடந்தது. அதைத் தொடர்ந்து 9 மணிக்கு அனைத்து இசைக் கலைஞர்களும் ஒன்றுசேர்ந்து பஞ்சரத்தினை கீர்த்தனை பாடி தியாகராஜர் சுவாமிகளுக்கு இசை அஞ்சலி செய்தனர்.
அப்போது தியாகராஜர் சிலைக்கு மகா திருமுழுக்கு நடந்தது. அதைத் தொடர்ந்து 10 மணிமுதல் 11 மணிவரை இசை நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. மாலை 5 மணி முதல் 8 மணிவரை இசை நிகழ்ச்சி நடக்கிறது.
முன்னதாக இரவு 7.30 மணிக்கு தியாகராஜர் உருவசிலை ஊர்வலம் நடக்கிறது. இரவு ஆஞ்சநேய உற்சவத்துடன் விழா முடிவடைகிறது. விழா ஏற்பாடுகளை சபா தலைவர் ஜி.கே. வாசன் தலைமையில் சபா நிர்வாகிகள் செய்திருந்தனர்.
இதையும் படிங்க: பட்டயக் கணக்காளர் தேர்வில் முதலிடம் பிடித்த சேலம் மாணவர்!