ETV Bharat / state

ஊர் திரும்ப முடியாதவர்களுக்கு ஆட்சியர் செய்த ஏற்பாடு!

தஞ்சை: திருவையாறு அருகே நடுக்காவேரியில் ஜோதிடம் பார்க்க வந்தவர்கள் மற்றும் ஆதரவற்றோர் 25 பேருக்கு ஆட்சியர் உத்தரவின் பேரில் உணவு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்துகொடுக்கப்பட்டு சமுதாயக் கூடத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

author img

By

Published : Apr 11, 2020, 3:22 PM IST

_thiruvaiyaru near collector order 25nos food and facilities in bdo

திருவையாறு அருகே நடுக்காவேரிக்கு, திருச்சி மாவட்டம் தொட்டியத்தைச் சார்ந்த குப்புசாமி, இவரது குடும்பத்தினர் 7 பேர், நரசப்பன், அவரது குடும்பத்தினர் 5 பேர், தூத்துக்குடி பகுதியைச் சேர்ந்த பூமி இவரது குடும்பத்தினர் 4 பேர் ஆகிய 16பேர் கடந்த சில தினங்களுக்கு முன் ஜோதிடம் பார்க்க வந்துள்ளனர். தமிழ்நாடு அரசு 144 தடை உத்தரவை பிறப்பித்ததைத் தொடர்ந்து தங்கள் பகுதிக்குச் செல்ல முடியாமல் நடுக்காவேரியிலேயே இருந்துள்ளனர்.

அதனைத் தொடர்ந்து உணவு உள்ளிட்ட அடிப்படை தேவகள் இன்றி அவர்கள் தவித்துவந்த நிலையில் இவர்களின் நிலை குறித்து திருவையாறு தாசில்தார் இளம்மாருதிக்கு தெரியவந்தது. அவர் தஞ்சை மாவட்ட ஆட்சியர் கோவிந்தராஜுக்கு தகவல் அளித்தார். உடனடியாக அவர்களை தொடர்பு கொண்டு அவர்களுக்குத் தேவையான அடிப்படை பொருள்களை வழங்கி, மூன்று வேளை உணவு வழங்க ஏற்பாடு செய்ய திருவையாறு வட்டார வளர்ச்சி அலுவலர் சாமிநாதன் தலைமையில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

தொடர்ந்து, அப்பகுதியில் இருந்த 9 ஆதரவற்றவர்களுடன் 25 நபர்களை நடுக்காவேரி சமுதாயக் கூடத்தில் தங்க வைக்க நடவடிக்கை எடுத்துள்ளனர். மேலும் ஊரடங்கு முடியும்வரை அனைவருக்கும் தேவையான அனைத்து உணவு, அடிப்படைப் பொருள்கள் வழங்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்று வட்டார வளர்ச்சி ஆணையர் சுவாமிநாதன் தெரிவித்தார்.

இதையும் படிங்க: ’இருள் அகலும் ஒளி தோன்றி நம்மை மகிழ்ச்சியுடன் வாழ வைக்கும்’ - அதிமுகவின் ஈஸ்டர் வாழ்த்து

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.