திருவையாறு அருகே மேலத்திருப்பந்துருத்தி வடக்குராஜ வீதியைச் சேர்ந்த ஜமால் முகமது மகன் முகமது யூனுஸ் (36). இவர் தஞ்சை அடுத்த பிள்ளையார்பட்டியில் மருந்தகம் வைத்து நடத்தி வருகின்றார். இந்நிலையில் நேற்று (டிச. 21) இரவு வழக்கமாக வியாபாரத்தை முடித்துவிட்டு கடையை பூட்டிவிட்டு, தனது இருசக்கர வாகனத்தில் பைபாஸ் சாலையில் வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார்.
அப்போது மணகரம்பை பைபாஸ் பாலம் அருகே வரும்போது அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் தூக்கி வீசப்பட்டு, அவர் சம்பவ இடத்திலேயே இறந்தார். இதுகுறித்து தகவலறிந்த நடுக்காவேரி ஆய்வாளர் செந்தில்குமார், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று முகமது யூனுஸ் உடலைக் கைப்பற்றி, திருவையாறு அரசு மருத்துவமனைக்கு உடற்கூராய்வுக்காக அனுப்பிவைத்தனர்.
விபத்து தொடர்பாக முகமது யூனுஸ் தந்தை ஜமால் முஹம்மது (69) அளித்த புகாரின்பேரில் நடுக்காவேரி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து அடையாளம் தெரியாத வாகனத்தைத் தேடி வருகின்றனர்.
இதையும் படிங்க: நடுரோட்டில் காதலியை சரமாரியாக வெட்டிய நபர்!