தஞ்சாவூர் மாவட்டம், திருக்காட்டுப்பள்ளி அருகே மீன் மார்க்கெட் உள்ளது. சுற்றுவட்டாரப் பகுதியில் உள்ள மக்கள் இந்த மார்கெட்டுக்கு வந்து தங்களுக்குத் தேவையான மீன்களை வாங்கிச் செல்கின்றனர்.
ஆனால் பேரூராட்சி நிர்வாகம் இந்த மீன் மார்கெட்டுக்கு எந்தவித பராமரிப்பும் செய்யாததால், அப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுகிறது.
தற்போது கரோனா வைரஸ் பரவிவரும் நிலையில், இங்கு சுத்தமற்று, தூர்நாற்றம் வீசி வருவதால் நோய் தொற்று பரவி தங்களுக்கு பாதிப்பு ஏற்படுமோ என்ற அச்சத்தில் மீன் விற்பனையாளர்கள், அப்பகுதி பொதுமக்கள் உள்ளனர். எனவே உடனடியாக பேரூராட்சி அலுவலர்கள் இதனை பராமரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க:சூப்பர் மார்க்கெட்டில் செல்போன் திருடிய கடற்படை தள ஊழியர்