திருவையாறு அருகே திங்களூர் கிராமத்தில் கைலாசநாதர் திருக்கோயில் உள்ளது. இக்கோயில் நவக்கிரக கோயில்களில் ஒன்றான சந்திரன் இருப்பிடமாக உள்ள தலமாகும். இங்கு தினமும் லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து சாமியை தரிசித்துச் செல்வார்கள்.
இந்நிலையில் தற்போது தமிழ்நாடு அரசின் உத்தரவுக்கு இணங்க சந்திரன் கோயில் மூடப்படுவதாக இந்து சமய அறநிலையத் துறையினர் தெரிவித்தனர்.
மேலும், பக்தர்கள் வர வேண்டாம் என்றும், தொடர்ந்து பூஜைகள் மட்டும் நடந்துவருவதாகவும், கோயிலில் மிகவும் சுத்தமாக வைத்துக்கொண்டிருக்க உதவ வேண்டுமென்றும் கோயில் நிர்வாகத்தினர் கேட்டுக்கொண்டனர்.
இதையும் படிங்க: பொள்ளாச்சியில் மூடப்பட்ட வழிபாட்டுத் தலங்கள்