ETV Bharat / state

சாலை வசதி இல்லாததால் ஆபத்தான முறையில் ஆற்றை கடந்து சடலத்தை எடுத்து செல்லும் ஊர்மக்கள்...

கும்பகோணம் அருகேஉரிய சாலை வசதி இல்லாததால் கிராம மக்கள் ஆபத்தான முறையில் ஆற்றை கடந்து சடலத்தை எடுத்து செல்கின்றனர்.

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : Aug 23, 2022, 12:04 PM IST

தஞ்சாவூர்: கும்பகோணம் அருகே பந்தநல்லூர் நெய்குப்பை கிராமத்தில் சுமார் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வாழ்ந்து வருகின்றனர். இப்பகுதி மக்கள், இறந்தவரின் உடலை சுடுகாட்டிற்கு எடுத்து செல்வதற்கு உரிய பாதை இல்லை என குற்றம்சாட்டி வருகின்றனர்.

சுடுகாட்டிற்கு உடலை எடுத்து செல்ல வேண்டும் என்றால், அப்பகுதியில் செல்லும் மண்ணியாற்றை கடந்து தான் செல்ல வேண்டும். ஆனால், மண்ணியாற்றின் குறுக்கே பாலம் இல்லாததால் உடலை தூக்கிக்கொண்டு ஆற்றில் இறங்கி தான் செல்ல வேண்டும்.

தண்ணீர் இல்லாத நாட்களில் எந்த பிரச்னையும் இல்லை என்றாலும் மழை பெய்து, ஆற்றில் தண்ணீர் செல்லும் போது உடலை எடுத்து செல்வதில் சிக்கல் ஏற்படுகிறது. இந்நிலையில், அந்த பகுதியைச் சேர்ந்த மணி என்ற முதியவர் நேற்று உயிரிழந்தார். தற்போது மண்ணியாற்றில் தண்ணீர் செல்வதால், அவரது உடலை தகனம் செய்ய அவரது உறவினர்கள் இடுப்பளவு ஆற்று தண்ணீரில் இறங்கி உடலை எடுத்துச் சென்றனர்.

சாலை வசதி இல்லாததால் ஆபத்தான முறையில் ஆற்றை கடந்து சடலத்தை எடுத்து செல்லும் ஊர்மக்கள்...

இது குறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், மயானத்திற்கு உரிய பாதை அமைத்து தர வேண்டும் என பலமுறை அதிகாரிகளிடம் மனு அளித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. ஆனால், இரு கரைகளிலும் உடலை எடுத்து செல்வதற்காக படிகளை கட்டி கொடுத்துள்ளனர்.

ஒரு சிறிய பாலத்தை கட்டி கொடுத்து இருந்தால் இது போன்ற நிலை ஏற்பட்டிருக்காது. ஆற்றில் அதிகளவு தண்ணீர் செல்லும்போது ஆபத்தான நிலையில் மிகுந்த சிரமத்திற்கு இடையே, ஆற்றில் இறங்கி உடலை எடுத்து செல்ல மிகவும் சிரமமாக உள்ளது. எனவே உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதையும் படிங்க: அரும்பாக்கம் வங்கி கொள்ளையர்களின் சிசிடிவி போட்டோ வெளியானது...

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.