ETV Bharat / state

அமைச்சர் அன்பில் மகேஷின் வருகையின்போது ஆம்புலன்ஸ் காத்திருக்க நேர்ந்ததால் சர்ச்சை! - அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி

அணைக்கரை கொள்ளிடம் ஆற்றில் ஆய்வுக்காக வந்த அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியின் வாகன வருகையின்போது, அவசர ஆம்புலன்ஸ் காத்திருக்க நேர்ந்த சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

அன்பில் மகேஷால் ஆம்புலன்ஸ் காத்திருந்ததால் சர்ச்சை..!

author img

By

Published : Aug 8, 2022, 10:37 PM IST

தஞ்சாவூர்: கொள்ளிடம் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதையடுத்து டெல்டா பகுதிகளில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆய்வு மேற்கொண்டார். அந்த வகையில் அணைக்கரை கொள்ளிடம் ஆற்றில் ஆய்வு மேற்கொள்ள வந்த அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அணைக்கரை கொள்ளிடம் ஆற்று பாலத்தில் தனது கான்வாய் வாகனம் மற்றும் அரசு அலுவலர்கள், கட்சிப்பிரமுகர்கள் உள்ளிட்ட கார்கள் குடைகுழுவுடன் வருகை தந்தார்.

அப்போது பாலத்தின் மறுபக்கத்தில் வந்த ஆம்புலன்ஸ் வாகனம் செல்வதற்கு வழியில்லாமல் காத்திருந்தது. அமைச்சரின் வாகனங்கள் வந்த பிறகு ஆம்புலன்ஸ் வாகனம் செல்ல அனுமதிக்கப்பட்டது. ஆற்றுப்பாலத்தில் இரண்டு வாகனங்கள் செல்ல முடியாத நிலையில் ஆம்புலன்ஸ் வாகனம் காத்திருக்கும் நிலை ஏற்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர். இதுதான் இப்போது சர்ச்சையாக உருவெடுத்துள்ளது.

ஆம்புலன்ஸ் வாகனத்தைச் செல்ல அனுமதித்துவிட்டு, அதன் பிறகு அமைச்சரின் வாகனம் செல்வதற்கு ஏற்பாடுகளை காவல் துறையினர் செய்திருக்கலாம் என சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாழியின் வருகையால் ஆம்புலன்ஸ் காத்திருக்க வைக்கப்பட்ட சம்பவம் சர்ச்சையாகியுள்ளது.

அமைச்சர் அன்பில் மகேஷின் வருகையின்போது ஆம்புலன்ஸ் காத்திருக்க நேர்ந்ததால் சர்ச்சை!

இதையும் படிங்க: கொள்ளிடம் வெள்ளப்பெருக்கு: நீரில் மூழ்கிய பயிர்கள் : விவசாயிகள் வேதனை!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.