வரும் 5ஆம் தேதி தஞ்சை பெரிய கோயிலில் குடமுழுக்கு நிகழ்ச்சி நடைபெறவுள்ள நிலையில், அதன் ஒரு பகுதியாக வெண்ணாற்றங்கரையில் உள்ள தஞ்சபுரீஸ்வரர் கோயிலில் யாகசாலை பூஜை நடைபெற்றது. அதற்கான காவிரி, கொள்ளிடம், வெண்ணாறு உள்ளிட்ட பல்வேறு நதிகளிலிருந்து புனிதநீர் கொண்டுவரப்பட்டு சிறப்புப் பூஜைகள் செய்யப்பட்டன.
இந்தப் புனிதநீரானது கைலாய வாத்தியம், தப்பாட்டம், ஒயிலாட்டம், கோலாட்டம் உள்ளிட்ட மங்கள வாத்தியங்கள் முழங்க முளைப்பாரி ஊர்வலத்துடன் கும்பகோணம் சர்மிளா யானைமீது ஏற்றி பள்ளி, அக்ரஹாரம், கரந்தை, கொடிமரத்து மூளை, கீழ வீதி, தெற்கு வீதி உள்ளிட்ட முக்கிய வீதிகள் வழியாக எடுத்துச் செல்லப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர்.
இதையும் படிங்க: குடமுழுக்கிற்கான அனைத்து ஏற்பாடுகளும் துரிதப்படுத்தப்பட்டுள்ளன