ETV Bharat / state

உணவு தானியம் வீணாவதைத் தடுக்க புதிய கருவி; மாற்றுத்திறனாளிகளுக்கான வாய்மொழி உத்தரவு நாற்காலி - stop food wastage

உணவு தானியம் வீணாவதை முன்கூட்டியே அறிந்து, அதனைத் தடுப்பதற்காக தஞ்சாவூரில் தனியார் பல்கலைக்கழகம் சார்பில் புதிய கருவி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

detect food wastage
உணவு தானியம் வீணாவதை தடுக்க புதிய கருவி
author img

By

Published : May 7, 2023, 1:23 PM IST

உணவு தானியம் வீணாவதை தடுக்க புதிய கருவி; அசத்திய பல்கலைக்கழகம்!

தஞ்சாவூர்: சாஸ்த்ரா பல்கலைக்கழகம் சார்பில் பயோநெஸ்ட் தொகுப்பு அறிமுக நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் தமிழ்நாடு பயோநெஸ்ட் தொகுப்பின் (கிளஸ்டர்) 10 புதிய தயாரிப்புகள் அறிமுகம் செய்யப்பட்டன. மேலும் இந்நிகழ்ச்சியில் பைராக் பயோடெக் துறைக்கான தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் மேக் இன் இந்தியா வசதிப் பிரிவுத் தலைவர் மணீஷ் திவான் தொடக்கி வைத்தார்.

பின்னர் பயோநெஸ்ட் தொகுப்பு தொழில் வளர்ப்பகங்களின் கிளின் கிரீன் டெக், நோயறிதல், உணவு தர மதிப்பீடு, உதவி சாதனங்கள், மூலக்கூறு உயிரியல் கருவிகள் உள்ளிட்டவை தொடர்பாக 10 புதிய தயாரிப்புகளை வெளியிட்டார். அதில், உணவு சேமிப்புக் கிடங்கில் இருப்பு வைக்கப்படும் உணவு தானியங்கள், பழங்கள், காய்கறிகளின் தரத்தைக் கண்காணிப்பதற்கான நவீன சாதனம் அறிமுகம் செய்யப்பட்டது.

இந்த சாதனம் மூலம் உணவு தானியங்கள், பழங்கள், காய்கறிகள் வீணாவதை முன்கூட்டியே அறிந்து, தடுப்பதற்கு வாய்ப்பாக அமைகிறது. குறிப்பாக உணவு தானியங்களைக் கிடங்கில் எவ்வளவு காலம் வைத்துக் கொள்ளலாம் என்பதை அறிந்து கொள்ளும் விதமாக, இந்த நவீன சாதனம் தயாரிக்கப்பட்டுள்ளது. மேலும் உணவு தானியம் வீணாவதைத் தடுக்க திருச்சி, பட்டுக்கோட்டை, திருவண்ணாமலை ஆகிய 3 தனியார் உணவுக் கிடங்கில் இந்த கருவி வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதேபோல, முதியோர்கள், மாற்றுத்திறனாளிகளுக்கான அதிநவீன சக்கர நாற்காலி அறிமுகம் செய்யப்பட்டது. வாய்மொழி உத்தரவு மூலம் இயங்கக்கூடிய இந்த சக்கர நாற்காலியில் செல்பேசி மூலம் முன்னே செல்லுதல், பின்னோக்கி நகர்தல், இடது மற்றும் வலது புறம் திரும்புதல் உள்ளிட்டவை தொடர்பாக நம்முடைய வாய்மொழியில் பதிவு செய்து பயன்படுத்தும்விதமாக தயாரிக்கப்பட்டுள்ளது.

மேலும் மின்னணு சாதனங்களைப் பேக்கிங் செய்யும்போது பயன்படுத்தப்படும் தெர்மோகோல் பொருள்களுக்கு பதிலாக விவசாயக் கழிவுகளான வைக்கோல், வெல்லப்பாகு, காளான் உள்ளிட்டவற்றைக் கொண்டு தயாரிக்கப்பட்ட தக்கை அறிமுகம் செய்யப்பட்டது. தெர்மோகோலை விட மிகவும் பாதுகாப்பான இந்த தக்கை மறுசுழற்சி செய்யக்கூடியவை. சுற்றுச்சூழலையும் பாதிக்காத இந்தத் தக்கை மூலம் விவசாயிகளுக்குக் கூடுதல் வருவாயும் கிடைக்கும் விதமாக தயாரிக்கப்பட்டுள்ளது.

அந்த வரிசையில், செல்பேசி மூலம் காற்று மாசுபாட்டை கண்டறிவதற்கான சாதனமும் அறிமுகம் செய்யப்பட்டது. பின்னர், மணீஷ் திவான் பேசுகையில், “இந்தத் தயாரிப்பு வெளியீடுகள் வெற்றிகரமானவை. தொழில் வளர்ப்பகங்களில் தமிழ்நாடு தொகுப்பின் ஒருங்கிணைந்த முயற்சிகள் பாராட்டத்தக்கவை” என்று தெரிவித்தார்.

மேலும் இந்த விழாவில் சாஸ்த்ரா நிகர்நிலைப் பல்கலைக்கழக முதன்மையர் சுவாமிநாதன், சாஸ்த்ரா அப்லெஸ்ட் தலைமை நிர்வாக அலுவலர் அனுராதா, தமிழ்நாடு பயோநெஸ்ட் தொகுப்பின் தலைமை நிர்வாக அலுவலர் முத்து சிங்காரம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இதையும் படிங்க: ஆதிச்சநல்லூர் அகழாய்வில் இரும்பால் ஆன நங்கூரம் கண்டுபிடிப்பு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.