கரோனா எதிரொலியால் தமிழ்நாடு அரசு தற்போது 144 தடை உத்தரவு பிறப்பித்துள்ள நிலையில் பொதுமக்கள் எவ்வளவு விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்று தெரியப்படுத்தியும் அதுபற்றி கவலைப்படாமல் தங்களது தேவைக்காக சுற்றுவட்டார பகுதியிலிருந்து திருக்காட்டுப்பள்ளி நோக்கி பைக்குகளிலும், கார்களிலும் வந்த வண்ணம் உள்ளனர் .
அவர்களை போலீசார் எல்லைப் பகுதியிலேயே நிறுத்தி அவர்களுக்கு அவசியம் இருப்பின் அவர்களின் வாகனத்தை நிறுத்திவிட்டு நடந்து சென்று நகருக்குள் பொருட்களை வாங்கிக்கொண்டு வந்து செல்ல அறிவுறுத்துகின்றனர்.
மேலும் தங்களது பணியைத் தொடர்ந்து செய்ய அனைத்து பொதுமக்களும் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டுமென்றும், அத்தியாவசியத் தேவையாக இருப்பின் சுற்றுவட்டாரப் பகுதி கிராம மக்கள் திருக்காட்டுப்பள்ளி டவுன் பகுதிக்கு வந்து தங்களது பொருட்களை வாங்கிச் செல்ல அனுமதிப்பதுடன் ,தேவையின்றி வர வேண்டாம் என்றும் அறிவுறுத்தி திருப்பி அனுப்பப்படுகின்றனர்.