தஞ்சாவூர் மாவட்டம், சூரக்கோட்டையில் பயங்கர ஆயுதங்களுடன் வீட்டில் கூலிப்படையினர் பதுங்கியிருப்பதாக காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் தஞ்சை சரக காவல் துறை துணைத் தலைவர் லோகநாதன், தஞ்சை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மகேஷ்வரன் ஆகியோரின் உத்தரவின் பேரில், தனிப்படை அமைத்து அவர்களைத் தேடி வந்தனர்.
அப்போது ராஜா என்பவர் வீட்டில் பதுங்கியிருந்த திருநெல்வேலியைச் சேர்ந்த இசக்கி, திருச்சியைச் சேர்ந்த கார்த்தி, திண்டுக்கல்லைச் சேர்ந்த ராஜபாண்டி, அரியலூரைச் சேர்ந்த விக்னேஷ், அம்மன்பேட்டையைச் சேர்ந்த சாமிநாதன் ஆகியோர் அடங்கிய கூலிப்படையினர் வீச்சரிவாள் மற்றும் கத்தியுடன் சுற்றி வளைத்து காவல் துறையினர் கைது செய்தனர்.
மேலும் காவல் துறையினர் அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து, தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: பவானியாற்றின் நீர்த்தேக்கத்தில் முதலை வேட்டை: ஒருவர் கைது, மற்றொருவர் தப்பியோட்டம்!