தஞ்சாவூர்: தஞ்சாவூர் பேராவூரணி அருகே உள்ள தில்லங்காடு கிராமத்தைச் சேர்ந்த அடைக்கலம் என்பவரது மகன் செல்வகுமார் (52). விவசாயி. இவரது மனைவி சுஜாதா 8 வருடங்களுக்கு முன்பு இறந்து விட்டார். இவருக்கு அரவிந்த் (21) என்ற மகனும், பவித்ரா (25), தமிழ்மணி(22) என்ற இரு மகள்களும் உள்ளனர். மகள்கள் இருவரும் திருமணம் ஆகி, கணவரோடு வசித்து வருகின்றனர்.
இந்நிலையில், கரம்பக்காட்டில் உள்ள உறவினர் வீட்டுக்கு வந்த இருசக்கர வாகனத்தில் வந்த செல்வகுமார், தனது சொந்தஊரான தில்லங்காடு திரும்பிக் கொண்டிருந்தபோது, கரம்பக்காடு சுடுகாடு அருகே அடையாளம் தெரியாத நபர்களால் வெட்டிக்கொலை செய்யப்பட்டார்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பட்டுக்கோட்டை டிஎஸ்பி செங்கமலக் கண்ணன், இன்ஸ்பெக்டர்கள் ராஜேந்திரன், அண்ணாதுரை, வசந்தா ஆகியோர் சடலத்தை மீட்டு பேராவூரிணி அரசு மருத்துவமனைக்கு உடற்கூராய்விற்காக அனுப்பிவைத்தனர்.
தொடர்ந்து அவர்கள் நடத்திய விசாரணையில், வெளிநாட்டில் வேலை செய்துவரும் நபருடைய மனைவி சுதா(38) என்ற பெண்ணுக்கும் செல்வகுமாருக்கும் திருமணத்தை தாண்டிய உறவு இருந்தது தெரியவந்தது. மேலும், சுதாவுக்கு அதே பகுதியைச் சேர்ந்த ராமலிங்கம் என்பவருடனும் திருமணத்தை தாண்டிய தொடர்பு இருந்துள்ளது.
சுதாவுடன் பழகுவதில் ஏற்பட்ட தகராறில் ராமலிங்கம் இந்த கொலையை செய்திருக்கலாமோ என்ற கோணத்தில் ராமலிங்கம், சுதா ஆகிய இருவரையும கைது செய்து காவல்துறையினர் விசாரணை நடத்திவருகின்றனர்.
இதையும் படிங்க: கே.டி. ராகவன் விவகாரம் - என்ன நடக்கிறது பாஜகவில்?