தமிழ்நாட்டில் இதுவரை நான்கு லட்சத்து 56 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு குணமடைந்து வீடு திரும்பிய நிலையில், தஞ்சை மாவட்டத்தில் இதுவரை எட்டாயிரத்து 51 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அதில் இன்று (செப்.11) ஒரே நாளில் மட்டும் தஞ்சையில் 145 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. தஞ்சை மருத்துவமனை மருத்துவக் கல்லூரியில் மொத்தம் 778 பேர் தற்போது சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
கரோனா பாதித்த இருவர் இன்று (செப்.11) உயிரிழந்த நிலையில், மாவட்டத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 132ஆக அதிகரித்துள்ளது. இன்று (செப்.11) ஒரே நாளில் 191 நபர்கள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.