தஞ்சாவூர் மாவட்டத்தை பொறுத்தவரை நாளுக்கு நாள் கரோனா தொற்று பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், நேற்று (ஆக.13) ஒரே நாளில் 154 நபர்களுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், தஞ்சை மாவட்டத்தில் இதுவரை 4 ஆயிரத்து 561 நபர்கள் கரோனா தொற்றால் பாதிப்படைந்து சிகிச்சை பெற்றனர். மேலும், தஞ்சை மருத்துவமனை மருத்துவக் கல்லூரியில் 1,146 பேர் சிகிச்சை பெற்று வரும் நிலையில், நேற்று ஒரே நாளில் 187 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை மாவட்டத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 59ஆக உள்ளது.