தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தைச் சேர்ந்த 72 வயதான பெண் மகப்பேறு மருத்துவர் ஒருவர், தனது வீட்டின் அருகிலேயே நர்சிங் ஹோம் நடத்தி வந்தார். இந்நிலையில், ஜூலை 1ஆம் தேதி உடல்நலக் குறைபாடு ஏற்பட்டது. இதனால் அவருக்கு ஸ்வாப் பரிசோதனை செய்யப்பட்டதில், கரோனா தொற்று உறுதியானது.
இதையடுத்து தஞ்சாவூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இருந்தபோதும் சிகிக்சைப் பலனின்றி உயிரிழந்தார். அவரது உடல் மருத்துவப் பணியாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இதற்கிடையில் மகப்பேறு மருத்துவரின் நர்சிங் ஹோமில் பணியாற்றிய பெண்கள், உறவினர்கள் உள்ளிட்ட நான்கு பேருக்கு பரிசோதனையில் தொற்று உறுதியானதால், அவர்கள் தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.