ETV Bharat / state

நெல் அறுவடை இயந்திரங்களுக்கு வாடகை நிர்ணயம் - rice harvesting machines meeting

தஞ்சாவூர்: நெல் அறுவடை இயந்திரங்களுக்கு வாடகை நிர்ணயம் செய்வது குறித்து மாவட்ட ஆட்சியர் கோவிந்த ராவ் தலைமையில் முத்தரப்புக் கூட்டம் நடைபெற்றது.

agri
agri
author img

By

Published : Jan 19, 2020, 10:34 AM IST

தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட ஆட்சியர் கோவிந்த ராவ் தலைமையில் நடப்பு சம்பா, தாளடி பருவங்களுக்கு நெல் அறுவடை இயந்திரங்களுக்கான வாடகை நிர்ணயம் செய்வது தொடர்பாக முத்தரப்புக் கூட்டம் நடைபெற்றது.

இதில், வேளாண்மைத் துறை அலுவலர்கள், நெல் அறுவடை இயந்திர உரிமையாளர்கள், விவசாயிகள் ஆகியோர் கலந்துகொண்டனர். நடப்பு சம்பா, தாளடி பருவத்திற்கு டயர் வகை நெல் அறுவடை இயந்திரங்களின் வாடகையாக ஒரு மணி நேரத்திற்கு ஆயிரத்து 500 ரூபாய் எனவும் செயின் வகை நெல் அறுவடை இயந்திரங்களின் வாடகையாக ஒரு மணி நேரத்திற்கு 2 ஆயிரம் ரூபாய் எனவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்ற முத்தரப்புக் கூட்டம்

வெளி மாநிலங்கள், வெளி மாவட்டங்களைச் சேர்ந்த நெல் அறுவடை இயந்திர உரிமையாளர்கள் தங்களது இயந்திரத்தை தஞ்சாவூர் வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் பதிவுசெய்து கொள்ளும்படி தெரிவிக்கப்பட்டுள்ளது.

நெல் அறுவடை இயந்திரங்களின் வாடகை தொடர்பான புகார்களை 04362-245570, 9842862692 ஆகிய எண்களில் வேளாண் பொறியியல் துறை அலுவலர்களிடம் காலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை விவசாயிகள் தெரிவிக்கலாம் எனவும் மாவட்ட ஆட்சியர் கோவிந்த ராவ் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: பட்ஜெட் 2020-21: விவசாயிகளுக்கு என்ன செய்ய வேண்டும்? பொருளாதார நிபுணர் யோசனை!

Intro:தஞ்சாவூர் ஜன 18

நெல் அறுவடை இயந்திரங்களுக்கு வாடகை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது
மாவட்ட ஆட்சியர் ம.கோவிந்த ராவ் தகவல்Body:

தஞ்சாவூர் மாவட்டம், நடப்பு சம்பா மற்றும் தாளடி பருவத்திற்கு நெல் அறுவடை இயந்திரங்களுக்கான வாடகை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சித்தலைவர் ம.கோவிந்த ராவ் தெரிவித்துள்ளார்.
தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட ஆட்சித் தலைவர் .ம.கோவிந்த ராவ் தலைமையில் நடப்பு சம்பா மற்றும் தாளடி பருவங்களுக்கு நெல் அறுவடை இயந்திரங்களுக்கான வாடகை நிர்ணயம் செய்வது தொடர்பாக வேளாண்மைத்துறை அலுவலர்கள், நெல் அறுவடை இயந்திர உரிமையாளர்கள் மற்றும் முன்னோடி விவசாயிகள் கலந்துகொண்ட முத்தரப்பு கூட்டம் நடைபெற்றது.
அதனடிப்படையில், நடப்பு சம்பா மற்றும் தாளடி பருவத்திற்கு டயர் வகை நெல் அறுவடை இயந்திரங்களின் வாடகையாக ஒரு மணி நேரத்திற்கு 1500 ரூபாய் எனவும், செயின் வகை நெல் அறுவடை இயந்திரங்களின் வாடகையாக ஒரு மணி நேரத்திற்கு 2000 ரூபாய் எனவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. வெளி மாநிலங்கள் மற்றும் வெளி மாவட்டங்களைச் சேர்ந்த நெல் அறுவடை இயந்திர உரிமையாளர்கள் தங்களது இயந்திரத்தை தஞ்சாவூர் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் பதிவு செய்து கொள்ளும்படி தெரிவிக்கப்பட்டுள்ளது.
நெல் அறுவடை இயந்திரங்களின் வாடகை தொடர்பான புகார்களை 04362-245570 மற்றும் 9842862692 ஆகிய எண்களில் வேளாண் பொறியியல் துறை அலுவலர்களிடம் காலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை விவசாயிகள் தெரிவிக்கலாம் என மாவட்ட ஆட்சித் தலைவர் கோவிந்த ராவ் தெரிவித்துள்ளார்.Conclusion:Sudhakaran 9976644011
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.