தஞ்சை பெரியகோயில் என்றழைக்கப்படும் பெருவுடையார் கோயிலில் வருகிற பிப்ரவரி 5ஆம் தேதி குடமுழுக்கு விழா 23 ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெற உள்ளது. இந்த குடமுழுக்கு விழாவை தமிழ் மொழியில் நடத்த வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டு வருவதால் போராட்டங்களும் நடந்து வருகின்றன.
இது தொடர்பான வழக்கு உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் இன்று விசாரணைக்கு வந்தநிலையில், நாளை தீர்ப்பு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் வெடிகுண்டு நிபுணர்கள் தஞ்சை பெரிய கோயிலின் வளாகத்தில் ஒவ்வொரு இடமாக சல்லடைபோட்டு சோதனை செய்து வருகின்றனர். இரண்டு மோப்ப நாய்களுடன் மெட்டல் டிடெக்டர், பாம் டிடெக்டர் கருவிகள் கொண்டு இந்த சோதனை நடத்தப்பட்டு வருகிறது.
இதையும் படிங்க:
பொதுத்தேர்வு - மாதிரி வினாத்தாளில் இருந்து கேள்விகள் கேட்கப்படாது!