ETV Bharat / state

சாரநாதப்பெருமாள் கோயிலில் தைப்பூச விழா கொடியேற்றம் - சாரநாதப்பெருமாள் கோயிலில் தைப்பூச விழா கொடியேற்றம்

திருச்சேறை சாரநாதப்பெருமாள் கோயிலில் தைப்பூச பெருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டு தரிசனம் செய்து மகிழ்ந்தனர்

சாரநாதப்பெருமாள் கோயிலில் தைப்பூச விழா கொடியேற்றம்

author img

By

Published : Jan 28, 2023, 11:11 AM IST

சாரநாதப்பெருமாள் கோயிலில் தைப்பூச விழா கொடியேற்றம்

தஞ்சாவூர்: கும்பகோணம் அருகேயுள்ள திருச்சேறை சாரநாயகி தாயார் சமேத சாரநாதப்பெருமாள் திருக்கோயில், 108 வைணவ தலங்களில் 12ஆவது தலமாகும். இத்தலத்தில் சாரநாதப்பெருமாள், ஸ்ரீதேவி, பூமிதேவி, நீலாதாட்சி, மார்பில் மகாலட்சுமி மற்றும் சாரநாயகி என பஞ்சலட்சுமிகளுடன் அருள்பாலிக்கிறார்.

காவிரி நதி மூவாயிரம் தேவவருடங்கள் தவம் செய்து திரேதா யுகத்தில், தை மாத பூச நட்சத்திர தினத்தன்று முதலில் மடிமேல் குழந்தையாகவும் பின்னர் வைகுண்டத்தில் இருப்பது போல பஞ்சலட்சுமிகளுடன் காட்சியளித்து 3 வரங்களை அளித்தார். அதில் தென்னகத்தில், கங்கை நதிக்கு ஈடான நிலையை அடையவும், இத்தலத்தில் வேண்டுவோருக்கு வேண்டுவன கிடைக்கும்.

பிராப்தமும், இத்தலத்தை தரிசப்பவர்கள் அனைவருக்கும் வைகுண்ட பிராப்தி கிடைக்கவும் வரம் பெற்றதாக வரலாறு. எனவே 108 வைணவ தலங்களில் இங்கு மட்டுமே தைபூசத்திருவிழா பத்து நாட்களுக்கு கொடியேற்றத்துடன் சிறப்பாக நடைபெறுவது வழக்கம்.

இத்தகைய சிறப்புமிக்க வைணவத்தலத்தில், சாரநாதப்பெருமாள் சர்வ அலங்காரத்தில், அழகிய பட்டாடை மற்றும் சிறப்பு மலர் அலங்காரத்தில் கொடிமரம் அருகே எழுந்தருள, நாதஸ்வர மேள தாள மங்கல வாத்தியங்கள் முழங்க, பட்டாச்சாரியார் வேத மந்திரங்கள் ஜபித்து பெருமாளுக்கு விஷேச பூஜைகள் செய்து, கொடிக்கும் பெருமாளுக்கும் நட்சத்திர ஆர்த்தி செய்து கருடாழ்வார் சின்னம் வரையப்பட்ட கொடி ஏற்றப்பட்டது.

தொடர்ந்து கொடி மரத்திற்கும் சிறப்பு பூஜைகள் செய்து தீபாராதனை செய்யப்பட்டது. இந்நிகழ்வில் ஏராளமானோர் கலந்து கொண்டு பெருமாளை தரிசனம் செய்து மகிழ்ந்தனர். தைப்பூச பெருவிழாவை முன்னிட்டு நாள்தோறும் பல்வேறு வாகனங்களில் சுவாமி திருவீதியுலா நடைபெறுகிறது.

விழாவின் முக்கிய நிகழ்வாக 4ஆம் நாளான 31ஆம் தேதி இரவு கருட வாகனத்தில் பெருமாள் திருவீதியுலாவாக வரும் கருடசேவை நிகழ்வும், பிறகு 6ஆம் நாளான பிப்ரவரி 2ஆம் தேதி மாலை திருக்கல்யாண வைபவமும், பின்னர் 9ஆம் நாளான பிப்ரவரி 5ஆம் தேதி பஞ்சலட்சுமிகளுடன் தேருக்கு எழுந்தருள திருத்தேரோட்டமும் நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: பழனியில் சண்முகர்- வள்ளி தெய்வானைக்கு திருக்கல்யாணம்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.