தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டை அடுத்த கார்காவயல் கிராமத்தைச் சேர்ந்தவர் சக்திவேல். இவருக்கு, சுந்தரி என்ற மனைவியும், சண்முகப்பிரியா (23), கௌசல்யா(22), சந்தியா (21), கௌசிகா(19) என நான்கு பெண் குழந்தைகளும், ராஜ வசந்தசேனன்(19) என்ற மகனும் உள்ளனர்.
இந்நிலையில் சக்திவேலின் குடும்பத்திற்கும், அவரது பக்கத்து வீட்டில் வசிக்கும் குபேந்திரன் வீட்டிற்கும், கடந்த மூன்று நாட்களாக தகராறு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், இப்பிரச்னையில் குபேந்திரன், சரோஜா மற்றும் அவர்களது மகன் குரு பிரபு ஆகியோர் சேர்ந்து கட்டையால் தாக்கியதில், சக்திவேலின் மூத்த மகள் சண்முகப்பிரியா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
மேலும், சக்திவேலின் மகள்கள், அவரது மகனும் உடலில் பலத்த காயங்களுடன், பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவத்தில் தொடர்புடைய குபேந்திரன் குடும்பத்தினரும்; இதே மருத்துவமனையில் சிகிச்சை பெறுகின்றனர்.
அதன்பின் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த பட்டுக்கோட்டை வட்ட காவல் துறையினர், இளம்பெண்ணின் உடலை மீட்டு, உடற்கூறு ஆய்வுக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.